தமிழ் சேனல்களில், சற்று மாறுப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குவது விஜய் டீவி. மற்ற அனைத்தும் சினிமா, சினிமா என்று அலையும் பொழுது, டாக் ஷோ நிகழ்ச்சிகளை, பொதுமக்கள் ரசிக்கும் வகையில் குடுப்பது தனிச் சிறப்பு. பல வருடங்களாக இதை செய்து வருகிறது. யூகி சேது தான் இது போன்ற நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். அவர் நிகழ்ச்சி பற்றி அதிகம் சொல்ல ஒன்றும் இல்லை.
சமீப காலமாக கோபி நடத்தும் நீயா நானா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. ஒரு சுவாரசியமான தலைப்பைக் கொண்டு, இரு தரப்பும் விவாதிக்கும் பாணி நம் சேனல்களுக்குப் புதுசு. டாக் ஷோ நடத்துனரின் சாம்ர்த்தியம் தான் நிகழ்ச்சியின் வெற்றியை தீர்மானிக்கும். பட்டி மன்றங்கள் கேலிக்கூத்து ஆகி விட்டது. இராஜா சன் டிவில் காமெடி நிகழ்ச்சி நடுவர் ஆகி மதன் பாப் கூட செட்டில ஆகி விட்டார், லியோனி சினிமாப் பாடல்களைத் தொகுக்கச் சென்று விட்டார். அவர்கள் திறமைக்கேற்ற வேலை. இதை முன்னரே செய்து இருந்தால் பட்டி மன்றம் இன்று உயிரோடு இருந்து இருக்கும். போன வாரம் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி இராஜா கூறினார். வெள்ளைக்காரன் எல்லாருக்கும் இங்கிலீஷ் தெரியாது. அவர் ஜெர்மனியில் பார்த்த வெள்ளைக்காரன் ஜெர்மன் மொழியில் தான் பேசினானாம். இவர்கள் நடத்திய பட்டி மன்றம் தான் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது. உடனே நம் மக்களில் பலர் படிக்காதவர். அவர்களுக்கு இந்த மாதிரி சொன்னால் தான் புரியும் என்று பலர் கிளம்பி விடுவார். படிக்காதது அவர் தப்பா ? நம்மை போல் படித்தவர் எல்லாம் பட்டி மன்றம் பார்க்கப் போனால், அவர்கள் கடைசி வரை படிக்கப்போவது இல்லை.
படிக்காதவங்க தான் இப்படி என்றால் படித்தவர்கள் அவர்களுக்கு ஒரு படி மேல் தான் உள்ளனர். நீயா நானா ஒரு எபிசோடுக்கு ஞானி சிறப்பு விருந்தினர். கணவன் மனைவி இடையே வரும் இடை வெளி பற்றிய விவாதம். ஒரு தரப்பு விவாதம் முடிந்தவுடன் கோபி ஞானியிடம் அபிப்பிராயம் கேட்க்க, அவரும் மனோதத்துவ மருத்துவர் போல், அந்த தம்பதியிடம் உள்ள குறையை எடுத்து உரைக்கிறார். சைக்காலஜி டிகிரியாவது இருக்கானு கேட்கனும். சமுக அக்கறை இருந்தா எங்கேயும் நாட்டாமை புரிய போகலாம் என்று நினைதார் போலும்.
Wednesday, November 25, 2009
Subscribe to:
Posts (Atom)