Wednesday, November 25, 2009
விஜய் டீவி - நீயா நானா
சமீப காலமாக கோபி நடத்தும் நீயா நானா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. ஒரு சுவாரசியமான தலைப்பைக் கொண்டு, இரு தரப்பும் விவாதிக்கும் பாணி நம் சேனல்களுக்குப் புதுசு. டாக் ஷோ நடத்துனரின் சாம்ர்த்தியம் தான் நிகழ்ச்சியின் வெற்றியை தீர்மானிக்கும். பட்டி மன்றங்கள் கேலிக்கூத்து ஆகி விட்டது. இராஜா சன் டிவில் காமெடி நிகழ்ச்சி நடுவர் ஆகி மதன் பாப் கூட செட்டில ஆகி விட்டார், லியோனி சினிமாப் பாடல்களைத் தொகுக்கச் சென்று விட்டார். அவர்கள் திறமைக்கேற்ற வேலை. இதை முன்னரே செய்து இருந்தால் பட்டி மன்றம் இன்று உயிரோடு இருந்து இருக்கும். போன வாரம் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி இராஜா கூறினார். வெள்ளைக்காரன் எல்லாருக்கும் இங்கிலீஷ் தெரியாது. அவர் ஜெர்மனியில் பார்த்த வெள்ளைக்காரன் ஜெர்மன் மொழியில் தான் பேசினானாம். இவர்கள் நடத்திய பட்டி மன்றம் தான் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது. உடனே நம் மக்களில் பலர் படிக்காதவர். அவர்களுக்கு இந்த மாதிரி சொன்னால் தான் புரியும் என்று பலர் கிளம்பி விடுவார். படிக்காதது அவர் தப்பா ? நம்மை போல் படித்தவர் எல்லாம் பட்டி மன்றம் பார்க்கப் போனால், அவர்கள் கடைசி வரை படிக்கப்போவது இல்லை.
படிக்காதவங்க தான் இப்படி என்றால் படித்தவர்கள் அவர்களுக்கு ஒரு படி மேல் தான் உள்ளனர். நீயா நானா ஒரு எபிசோடுக்கு ஞானி சிறப்பு விருந்தினர். கணவன் மனைவி இடையே வரும் இடை வெளி பற்றிய விவாதம். ஒரு தரப்பு விவாதம் முடிந்தவுடன் கோபி ஞானியிடம் அபிப்பிராயம் கேட்க்க, அவரும் மனோதத்துவ மருத்துவர் போல், அந்த தம்பதியிடம் உள்ள குறையை எடுத்து உரைக்கிறார். சைக்காலஜி டிகிரியாவது இருக்கானு கேட்கனும். சமுக அக்கறை இருந்தா எங்கேயும் நாட்டாமை புரிய போகலாம் என்று நினைதார் போலும்.
Wednesday, June 10, 2009
வார்த்தை நேர்மை - ஆனந்த விகடன் மற்றும் எஸ்ரா
ஆனந்த விகடனில் அவரின் தொடர் வரவுள்ளது என்ற அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியது.முதல் கட்டுரை வாசனை பற்றியது. எதோ மிகவும் கஷ்டப்பட்டு எழுத முயன்றது போன்ற ஒரு தோற்றம். வார்த்தை நேர்மை இல்லை. விகடன் குழு எடிட் செய்தது போல் தோன்றுகிறது. விகடன் எப்போழுது ஒரு அறிவு ஜீவித்தனம் கொண்ட பத்திரிக்கை என்ற நினைப்போடு தான் செயல்படும். தரத்தில் குமுதம் போன்றதே. குமுதம் நடுப்பக்கத்தில் தமிழ் நடிகைகளின் படங்களை போடும், விகடன் இன்பாக்ஸ் என்ற பெயரில் இந்தி நடிகையின் படத்தை போடும்.
இது விகடனின் வேலை இல்லாமல் எஸ்ராவின் பங்களிப்பு என்றால், “சார் உங்க கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை.” கட்டுரையின் முடிவில் தகவல் பகுதி திணிப்பு போல் தோன்றுகிறது. இது எல்லாம் லேணா பார்த்துக்கொள்வார். நீங்கள் மீண்டும் உங்கள் இயறக்கையான பாணியில் எழுதுங்கள்.
Wednesday, December 24, 2008
திரு அடிகள் - 1
தானறிந்து திருமாகாலறியும் அறிவே அறிவு
சேய்க்கு ஊன் விருத்தம்
சிறார்க்கு கெலி விருத்தம்
வாலிபருக்கு திரை விருத்தம்
திருமாலடி வேண்டுவர்க்கு திருவிருத்தம்.
Saturday, November 15, 2008
வாங்க குளிக்கலாம்….
தொடர்ந்து வரும் பெட்ரோல் விலை ஏற்றம், நமக்கு மட்டும் பிரச்சனை இல்லை, பெட்ரோல் பங்க்குகளுக்கும் தான். தனியார் பங்க்குகள், அரசாங்க பங்க்குகளுடன் விலையில் போட்டி போட முடிவதில்லை. விளைவு… வாடிக்கையாளர்களை கஸ்டமர் ஸர்வீஸ் என்ற பெயரில் குஷிப்படுத்துவது.
இந்தியன் ஆயிலை விட ஷெல் மூன்று ருபாய் விலை ஜாஸ்தி. ஷெல் சென்றால் பெட்ரோல் தவிற மற்ற அனைத்தையும் பற்றி பேசுவார்கள்.
மொத்தமும் பெண் ஊழியர்கள் தான். உள்ள போனவுடன், ஒரு வணக்கம். அப்பறம் வேகமா விலையை கூறிவிட்டு, சேவையை ஆரம்பிப்பாங்க,
“ஸார் விண்டுஷீல்டு கீளின் பண்ணவா ?”
“டயர் பாலிஷ் போடவா ?”
“எதாவது ஸனேக்ஸ் சாப்பிடுங்க… பில் போடற இடத்தில் தான் இருக்கு..?”
இது எல்லாம் முடிந்து கிளம்பும் போது ஒரு டாட்டா வேற…பொண்டாட்டி கூட அலுவலம் போகும் போது இப்படி வழியனுப்பினது இல்லை.
இன்னும் போக போக என்னவெல்லாம் வருமோ ?
“சார் குளிப்பாட்டி விடவா ?”
”ஒரு குவிக் ஷேவிங் ?”
“குழந்தைக்கு டயபர் மாத்தனுமா ?”
”கேரளா ஆயில் மஸாஜ் இருக்கு…”
“இன்னிக்கு சனிக்கிழமை, சனி நீறாடனும், எண்ணை தேய்த்து குளிச்சு விடவா ?”
Friday, November 14, 2008
நமிதா ,குஷ்பு – என் காதலை உணர்……
சாலைகளில் செல்லும் போது நாம் எல்லாரும் லாரிகள், டெம்போ மற்றும் ஆட்டோக்களின் பின்னால் எழுதியிருப்பதை பார்த்து இருப்போம். பெங்களுர் போன்ற நகரில் சாலையில் டராபிக்கில் ஊர்ந்து செல்லும் வேளை, அந்த எழுத்துக்கள் தான் நல்ல டைம் பாஸ். பல சமயம் மிகச் சாதாரணமாக இருக்கும், சில சிரிப்பை வரவழைக்கும்.
முக்கால்வாசி லாரி மற்றும் டெம்போகளில் உள்ள வசனம், “Sound OK Horn”. ரொம்ப நாளா இதை சரியாக நான் படிக்கவில்லை. ஒரு நாள் திடீர் என்று தோன்றியது, “Sound Horn Okaaaaayyyyyy”, இது தான் சரியாக படிக்கும் முறை, அடுத்த தடவை இதை பார்க்கும் போது சொல்லி பாருங்க.
இன்று காலையில் ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த வாசகம்,
Lifte is short
Make a Sweet
Feel My Love
வாழ்க்கை மிகச் சிறியது, அதை இனிப்பானதாக செய், இப்படித்தான் வர வேண்டும், ஆனால் Make a Sweet, இனிப்பைச் செய் என்று இருக்கு, தவறாக எழுதி இருக்கலாம், Make it sweet என்று வர வேண்டும்.
என் காதலை உணர், கடைசி வரி. ஆண்களை நோக்கி இதை எழுத ஆட்டோகாரர் கேயா ? இல்லை பின்னால் வரும் மகளிர்களை நோக்கியா இந்த வரிகள் ? எத்தனை பொம்பளைகளுக்கு அவர் காதலை சொல்வார் ?
சிறிது தூரம் போன் பின் தான் ரியலைஷைசன் வந்தது.
Make a sweet தான் சரி. அவருக்கு குஷ்பு,நமிதா மாதிரி கொழுக் மொழுக் பெண்கள் தான் பிடிக்கும் போல. அதனால் தான் இனிப்பைக் செய் என்று எழுதி இருக்கார். இனிப்பைச் செய்து விட்டு சும்மா இருப்பாங்களா, தின்னுவாங்க, நம்ம வாழ்கை ரொம்ப சின்னது, அதுக்குள்ள தின்ன முடிந்த எல்லாத்தையும் ஒரு கை பார்த்தா ? உடம்பு ஊத தான் செய்யும். அப்படி தின்னு கொழுக் ஆன பெண்களை பார்த்து தன் காதலை உணரச் சொல்ராப்ல.
அலுவலகம் வந்து விட்டதால் ஆராச்சியை தொடர முடியவில்லை !!!
Wednesday, November 5, 2008
சரோஜா தேவி சோப்பு டப்பா
சென்ற வாரம் நீண்ட நாள் பிறகு நண்பர் ஒருவனை சந்தித்தேன். குசல விசாரிப்புக்கு பிறகு, புதிதாக பிஸினஸ் செய்யப் போவதாக கூறினான். பிஸினஸ் ஆரம்பித்தால் என்னையும் சேர்த்துகோபா கூறியது தான் தாமதம், அடுத்த சனிக்கிழமை வா..உனக்கு டெல் சி இ ஒ அறிமுகப்படுத்தறேன், அப்படியே பிசினஸ் பற்றி உனக்கு தெரிந்துவிடும் என்றான். நம்பர் டு நம்பர் த்ரி பிஸினஸ் இல்லையேனு கேட்டால், டி டி ஸ் கழித்து தான் உனக்கு பேமண்ட் வரும், பார்ம் 16 குடுப்பாஙக என்றான்.
சனிக்கழமை , ஒரு கம்யுனிடி ஹாலில் முப்பது பேர் அமர்ந்து இருந்தார்கள். முக்கால்வாசி இல்லத்து அரசிகள். சிலர் குழந்தைகளோடு அஜர். நம்ம ராசி முதல் வரிசையில் அமர்த்தப்பட்டேன்.
ஒரு உயரமான ஆசாமி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், செல் போனை அனைத்து வைக்கும்படி வேண்டுகோள் (மிரட்டி) விடுத்தார். பின்னர் எந்த அறிவிப்பும் இல்லாமல் என்னைப் பார்த்து, உங்க வாழ்நாள் கனவு என்ன என்றார்….முதல் பென்ச் எனக்கு எப்பொவுமே சரிப்படாது, எனக்கு அப்படி எதுவும் இல்லை என்றேன். சரி நான் கூறுகிறேன் என்று அரம்பித்தார், ஒரு பங்களா, ஐந்து கோடி, கார் ஒரு கோடி, குழந்தைப் படிப்பு, இரண்டு கோடி..இப்படி கணக்கு போட்டு இறுபது கோடியின் நிப்பாட்டினார். ஆனால் மாச சம்பளத்தில் நம்மால் வாழ்நாள் சேமிப்பு முக்கி தக்கி ஒரு கோடி தான் சேர்க்க முடியும். பக்கதுல இருந்த சிலிவ்லெஸ் ஆண்டி மண்டைய ஓவரா ஆட்டி கேட்டுக்கிட்டாங்க.
கடைசியில் மெட்டர் என்ன, நம்ம முப்பதாயிரம் கட்டி கம்பனியில் சேர வேண்டுமாம். இரண்டே பேர் நாம் மேலும் சேர்த்தால் போதும், அவர்களின் கீழ் உறுப்பினர் சேரச் சேர நமக்கு ”பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்….”
அவர் கம்பனி கம்பனி என்ற பொழுது, பிதாமகன் சுர்யா தான் நினைவுக்கு வந்தார். அயிரம் ருபாய் பொருளை வெறும் முன்னூறு ருபாய்க்கு கேட்டதால், கம்பனிக்கு கட்டுப்படல…இருந்தாலும் உங்க மன தைரியத்த பாராட்டி, சரோஜா தேவி சோப்பு டப்பா, இனாம்….
கூட்டம் முடிந்து நண்பன் என்ன முடிவு என்றான், “நல்ல திட்டம், அப்போ நான் கிளம்பறேன், வீட்ல தேடுவாங்க” (என்னிக்கு தேடி இருக்காங்க, வேற போய் வரல….)சொல்லி விட்டு எஸ்கேப்.
“
Tuesday, November 4, 2008
அசோகமித்ரன் – ஊரின் மிக அழகான பெண்
இதற்கு முன்னால் அசோகமித்ரன் படித்ததில்லை. அழிவற்றவை தான் நான் படிக்கும் முதல் புத்தகம். ஆரம்பம் சில கர்ண பரம்பரை கதைகள், பின்னர் அவர் சிறுகதைகள்.
முதல் கதை, திருநீலகண்டர் - திருவோடைத் தேடி என்ற தலைப்பு பொறுத்தமாக இருக்கும். சிறு வயது முதல் திருவோடை தேடி அலைபவனுக்கு இறுதியில் ஆண்டியாக சென்ற ஒரு சொந்தக்காரர், தன் திருவோடை தபாலில் அனுப்புகிறார்.
என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவில்லை. நகுலனை தான் துனைக்கு அழைக்க வேண்டும். சாருவிடம் கேட்டால் திட்டு தான் விழும். ஒரே சமயத்தில் சாருவின் ஊரில் மிக அழகான பெண் - மொழிபெயர்ப்பு கதைகள், மற்றும் அழிவற்றவை படித்ததின் வினை.
சாருவின் மொழிபெயர்ப்புக் கதைகள் அனைத்துமே கிளாசிக். முக்கியமாக சாருவின் முன்னுரை மிகச் துல்லியமாக கதை களம் மற்றும் எழுத்தாளரின் மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கதையும் ஹான்டிங் ( Hauting ) வகை.ஒரு சிறுகதை இவ்வளவு தாக்கம் எற்படுத்துவது எனக்கு இது தான் முதல் முறை.
Saturday, October 25, 2008
கிணற்றுத் தவளை வரலாறு
வரலாறு, படிப்பது என்றுமே வேப்பங்காய். தேதிகள் நினைவில் இருக்க வேண்டும், வரைப்பட்ம் கச்சித்தமாக வரைய வேண்டும் இப்படி பல. மொத்ததில் பரீட்சையில் பாஸ் பண்ணும் அளவு தெரிந்தால் போதும் என்று தான் தோன்றும். நான் லினியர் முறையில் நம் வரலாற்றுப் பாடத்திட்டம் அமைக்கப்பட்டதே இதற்கு முக்கியமான காரணம்.
ஹராப்பா கலாச்சாரம் பற்றி படிக்கும் போது, அதே சமயத்தில் ஐரோப்பா எப்படி இருந்தது, சீனாவில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது. முக்கியமாக எதற்காகப் படிக்கிறோம் என்றும் தெரியாது. பாரதி சரித்திரம் தேர்ச்சி கொள் என்று கூறியது தேதிகளை மனப்பாடம் செய்ய அல்ல.
வரலாறு என்பது மனித வளர்ச்சியின் ஒரு பதிவு, உலகப்பரப்பில் வந்து சென்ற பலவிதமான மனிதர்களின் உழைப்பு, சிந்தனை இவைதான் இன்றைய உலகின் அஸ்திவாரம். அவர்களின் எண்ணவோட்டத்தை அறிய முற்படுவது தான் வரலாறின் முக்கிய வேலை. சம்பவங்கள் நடந்த தேதி, இடம் மட்டும் நினைவு வைத்துகொள்ள வரலாறு தேவை இல்லை. அந்த காலக்கட்த்தில் எந்த மன நிலையில் மனிதர்கள் அந்த சம்பத்தை நட்த்தினார்கள் என்பது மிக முக்கியம்.
அதே சமயம் அவர்களை சுற்றி இருந்த உலகம் எப்படிப்பட்டது, மற்ற தேச மக்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருந்தனர், இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் வரலாறு படிப்பது அஸ்திவாரம் இல்லாம் வீடு கட்டுவதற்கு சமம்.
Sunday, October 19, 2008
அமெரிக்கா
“Whatever An american says, take it with a pinch of Salt"
சிட்டிகை இல்ல, ஒரு மூட்டை உப்பு போட்டு தான் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். எதற்க்கு எடுத்தாலும் “Great, Fabulous, Wow" இது தான்.
“Wow Factor" என்ற வார்த்தையை உண்டாக்கிய பெருமை அவர்களைச் சேரும். அது இல்லாத எதுவுமே உருப்படாது. இந்த லட்சனத்தில், நம்ம பசங்களும் அவர்களை பின் பற்றினால்,
Literally பின் பற்றினால் என்ன அவஸ்த்தை பட நேருமோ அவை அனைத்து பட வேண்டும்.
நான் படித்த புத்தகங்கள்
இல்லை, இந்த தர்க்கத்துக்குப் போகாமல் நேரடியாக ஒரு கணக்கு பார்க்க முடியுமா ?
www.goodreads.com, மற்ற நெட்வொர்க்கிங் தளத்தை விட சற்று மாறுப்பட்டது. நாம் என்ன படித்தோம், படிக்கின்றோம், படிக்க போகின்றோம், இவற்றின் பதிவே அதன் நோக்கம். நண்பர்கள்
கூட்டத்தை அழைக்கலாம், படித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம்.
நான் படித்த புத்தகங்களை வரிசைப் படித்தினால் ஐம்பத்தியாறு தேறியது. முப்பது வருஷத்தில் என்னால் முடிந்தது இவ்வளவு தான். தோராயமாக அறுபது வருடம் வாழ்ந்தால் மேலும் 50
புத்தகமே படிக்க முடியும். இந்த கணக்கில் சென்றால்.. வாழ்நாளில் நூறு புத்தகம் தான் படிக்க இயலுமா ?
fiction படிப்பது மிக எளிது, ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தை முடித்து விடலாம், Non-Fiction, philosophy travel, sattire, classic வகைகள் படிக்க பொறுமையும், ஆவலும் அவசியம் தேவை.
நண்பர் ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று non fiction படிப்பாராம். நானும் முனைந்த பொழுது, மூன்று ஐந்து ஆகிற்று, ஆனால் எந்த புத்தகமும் முடியும் போல தோன்றவில்லை. கதோபனிஷத் படிக்கும் பொழுது, மதுரை விமான நிலையத்தில் அமாங் த பிலிவர்ஸ் வாங்கினேன், படிக்க ஆரம்பித்தால் கிட்ட தட்ட முக்கால் வாசி முடிந்து விட்டது. திரும்பவும் கதோபனிஷத் விட்ட இடத்தில் தொடர முடியவில்லை !
ஒரு புத்தகம் படிக்கும் சமயம், ஒரு விதமான மெண்டல் கம்போஸர் செட் ஆகி விடுவதை தவிர்க்க இயலாது. அந்த மனநிலையில் தான் புத்தகம் மிக நெருக்கமாக நம்மிடம் பேசும்,
அந்நிலை தவறினால் தெரிந்த பாஷையும் அந்நியமாக தோன்றும். Every book chooses its reader, சும்மா ஜகன் மோகினி வசனம் கணக்காக இருந்தாலும் நம்பாமல் இருக்க
முடியவில்லை. சில எழுத்தை கேள்வி இல்லாமல் ஒத்துக்கொள்ள முடிகிறது, சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் காரித்துப்பத் தான் தோன்றுகிறது.