Sunday, October 19, 2008

நான் படித்த புத்தகங்கள்

புத்தகங்கள் வழி உலகத்தைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். ஒருவர் வாழ்நாளில் எவ்வளவு புத்தகம் படிக்க முடியும் ? எப்படி படித்தோம் என்பது தான் முக்கியமே தவிர எவ்வளவு என்பது

இல்லை, இந்த தர்க்கத்துக்குப் போகாமல் நேரடியாக ஒரு கணக்கு பார்க்க முடியுமா ?

www.goodreads.com, மற்ற நெட்வொர்க்கிங் தளத்தை விட சற்று மாறுப்பட்டது. நாம் என்ன படித்தோம், படிக்கின்றோம், படிக்க போகின்றோம், இவற்றின் பதிவே அதன் நோக்கம். நண்பர்கள்

கூட்டத்தை அழைக்கலாம், படித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் படித்த புத்தகங்களை வரிசைப் படித்தினால் ஐம்பத்தியாறு தேறியது. முப்பது வருஷத்தில் என்னால் முடிந்தது இவ்வளவு தான். தோராயமாக அறுபது வருடம் வாழ்ந்தால் மேலும் 50

புத்தகமே படிக்க முடியும். இந்த கணக்கில் சென்றால்.. வாழ்நாளில் நூறு புத்தகம் தான் படிக்க இயலுமா ?

fiction படிப்பது மிக எளிது, ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தை முடித்து விடலாம், Non-Fiction, philosophy travel, sattire, classic வகைகள் படிக்க பொறுமையும், ஆவலும் அவசியம் தேவை.

நண்பர் ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று non fiction படிப்பாராம். நானும் முனைந்த பொழுது, மூன்று ஐந்து ஆகிற்று, ஆனால் எந்த புத்தகமும் முடியும் போல தோன்றவில்லை. கதோபனிஷத் படிக்கும் பொழுது, மதுரை விமான நிலையத்தில் அமாங் த பிலிவர்ஸ் வாங்கினேன், படிக்க ஆரம்பித்தால் கிட்ட தட்ட முக்கால் வாசி முடிந்து விட்டது. திரும்பவும் கதோபனிஷத் விட்ட இடத்தில் தொடர முடியவில்லை !

ஒரு புத்தகம் படிக்கும் சமயம், ஒரு விதமான மெண்டல் கம்போஸர் செட் ஆகி விடுவதை தவிர்க்க இயலாது. அந்த மனநிலையில் தான் புத்தகம் மிக நெருக்கமாக நம்மிடம் பேசும்,

அந்நிலை தவறினால் தெரிந்த பாஷையும் அந்நியமாக தோன்றும். Every book chooses its reader, சும்மா ஜகன் மோகினி வசனம் கணக்காக இருந்தாலும் நம்பாமல் இருக்க

முடியவில்லை. சில எழுத்தை கேள்வி இல்லாமல் ஒத்துக்கொள்ள முடிகிறது, சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் காரித்துப்பத் தான் தோன்றுகிறது.

No comments: