வரலாறு, படிப்பது என்றுமே வேப்பங்காய். தேதிகள் நினைவில் இருக்க வேண்டும், வரைப்பட்ம் கச்சித்தமாக வரைய வேண்டும் இப்படி பல. மொத்ததில் பரீட்சையில் பாஸ் பண்ணும் அளவு தெரிந்தால் போதும் என்று தான் தோன்றும். நான் லினியர் முறையில் நம் வரலாற்றுப் பாடத்திட்டம் அமைக்கப்பட்டதே இதற்கு முக்கியமான காரணம்.
ஹராப்பா கலாச்சாரம் பற்றி படிக்கும் போது, அதே சமயத்தில் ஐரோப்பா எப்படி இருந்தது, சீனாவில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது. முக்கியமாக எதற்காகப் படிக்கிறோம் என்றும் தெரியாது. பாரதி சரித்திரம் தேர்ச்சி கொள் என்று கூறியது தேதிகளை மனப்பாடம் செய்ய அல்ல.
வரலாறு என்பது மனித வளர்ச்சியின் ஒரு பதிவு, உலகப்பரப்பில் வந்து சென்ற பலவிதமான மனிதர்களின் உழைப்பு, சிந்தனை இவைதான் இன்றைய உலகின் அஸ்திவாரம். அவர்களின் எண்ணவோட்டத்தை அறிய முற்படுவது தான் வரலாறின் முக்கிய வேலை. சம்பவங்கள் நடந்த தேதி, இடம் மட்டும் நினைவு வைத்துகொள்ள வரலாறு தேவை இல்லை. அந்த காலக்கட்த்தில் எந்த மன நிலையில் மனிதர்கள் அந்த சம்பத்தை நட்த்தினார்கள் என்பது மிக முக்கியம்.
அதே சமயம் அவர்களை சுற்றி இருந்த உலகம் எப்படிப்பட்டது, மற்ற தேச மக்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருந்தனர், இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் வரலாறு படிப்பது அஸ்திவாரம் இல்லாம் வீடு கட்டுவதற்கு சமம்.
No comments:
Post a Comment