மார்கெட்டில் இரண்டு வாரமாக ரோபோ பொம்மைக்கு ஏக கிராக்கி.
"அப்பா ஸ்கூல்ல எல்லாரும் வாங்கிடாங்க பா, நாமளும் ஒன்னு வாங்கலாம், ரெய்ம்ஸ் எல்லாம் சொல்லுமாம் பா....சிகப்பு லயிட்டோட நடக்குமாம், இன்னிக்கு வாங்கிதாப்பா ?"
"அவன் எதுமே கேட்டதில்லை, முன்னுறு ருபாய் தானாம், கனகா அக்கா வீட்ல நெத்து வாங்கி இருக்காங்க, இன்னிக்கு வரும் போது வாங்கிட்டு வாருங்களேன் !!!"
நான் தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ஒரு சிறு நகரத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில் உதவி இன்ஜினியர், குவாடர்ஸ் வீடு, மனைவி, ஒரு மகன் சந்திரன், வயது ஐந்து, குவாடர்ஸ் அருகில் இருக்கும் கேந்திரிய வித்யாலயாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான், படு சுட்டி. அளவான சம்பளம், நிம்மதியான வாழ்கை, இந்த சந்தர்ப்பதில் தான், ரோபோ பொம்மை எங்கள் வீட்டுக்கு வந்தது. இரண்டு டிரிப்ள் எ பாட்டிரி போட்டால் இயங்கும். ஆங்கிலத்தில் ரெய்ம்ஸ் நடந்து கொண்டே சொல்லும். சந்திரனுக்கு ரொம்ப படித்து போனது, வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அந்த ரோபோவுடன், தான்.
அன்று இரவு, எதோ நெருடுவது போல் உள்ளதே என்று விள்க்கை போட்டால் பக்கதில் அந்த ரோபோ பொம்மை, அதன் தலையில் உள்ள சிகப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, சந்திரனுக்கு என் அருகை தான் படுக்க வேண்டும், பொம்மை அவன் அருகில் இருந்தது, "தூங்கும் போதும் பொம்மையா !!! " பொம்மை அனைத்து விட்டு படுத்தேன்.
மறு நாள், சந்திரனிடம், "ஏண்டா தூங்கும் போது பொம்மையோடு தான் தூங்குவியா ?"
"இல்லப்பா, பொம்மைய அலமாரியில் வைத்து விட்டு தான் தாங்கினேன்..."
"என்னடா ...நைட் அது உன் பக்கத்தில் ஆன் அகி கிடந்த்தது லைட் எல்லாம் எரிந்து"
"என்னப்பா சொல்ற இரண்டு நாளா அதுக்கு பேட்ரி வேண்டும்னு அம்மாகிட்ட கேட்டா , வாங்கி தர மாட்டேன் றா ?"
தொடரும்
Wednesday, May 14, 2008
Friday, May 9, 2008
சினிமா மினிமா
சினிமா என்ற் ஊடகத்தின் அதி முக்கியமான வேலை மக்களுக்கு பொழுது போக்குச் சாதனமாகச் செயல்படுவது தான். அந்த வேலையை மிகை இல்லாமல் செய்ய வேண்டும், சில படிப்பினையை ஊட்டலாம், சிரித்து மகிழ அனைவர் மனதும் புண்படாதவாறு காட்சிகளை காட்டலாம், கவிதை, இசை ஆகிய கலைகளின் நுட்பத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம். இதனால் சினிமாவும் மேண்படும், அதை பார்க்கும் சமுதாயமும் மேண்படும். நல்ல கருத்துக்களை பொழுது போக்கு அம்சத்தோடு மக்களுக்கு அளிக்கும் சினிமாவே மிக உன்னதமான சினிமா.
மனித மனத்தின் வக்கிர பகுதிகளை பதிவு செய்வது, மிகைபடுத்த பட்ட மனிதர்களை காண்பித்து உசுப்பேத்தி விடுவது, செயற்கை செய்கைகளை பிராமதப்படுத்தி காண்பிப்பது, இத்தகைய செயல்களே இன்றைய சினிமாவின் தலையான வேலையாக உள்ளது.
கலைஞர் டிவி யில் தமிழ் புத்தாண்டு அன்று சாயம் நாலு மணி முதல் இரவு 8 மணி வரை பருத்தி வீரன் என்ற படம் ஓளிபரப்பபட்டது. பல விருதுகளை குவித்த படம், வெளிநாடுகளில் பாராட்டப் பட்ட படம். வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி படம். ஆனால் எதை பதிவு செய்தது ?தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராம நிகழ்வுகளையா ?, அங்கே இருக்கும் மனிதர்களின் வாழ்வையா ?
இயக்குனரின் நோக்கம் என்ன ?
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதி வெறியோடு பெண் மண் போதை இவையே வாழ்க்கை என்று அலைபவன் ஒருவனின் காதல் கதையை பலவித பொழுது போக்கு அம்சத்தோடு (? முக்கியமான பொழுதுபோக்கு, திருநங்கைகளை வைத்து ஒரு கேலி கூத்து.) கூறி இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தோடு முடித்து, படித்த மக்களின் மத்தியில் இப்படியும் ஜனங்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று காட்டி நல்ல பெயர் எடுப்பது.
நல்ல லாபம் சம்பாரிப்பது, மிகச்சிலரே இப்படி படம் எடுப்பர் ஆகையால் அனைத்து விருது வழங்கும் விழாக்களுக்கு அனுப்பி வைத்து, கிடைக்கும் விருதுகளை வாங்கி, அங்கே மெடையில் ஒரு அறிவு ஜீவித்தனமான உரை அற்றுவது.
இத்தனையும் முடித்து அவர் அடுத்த படத்திற்க்கு போய் விடுவார், அவரை பாராட்டிய படித்த கூட்டமும் தங்களின் மற்ற வேலைகளை கவனிக்க போய் விடுவார், இறுதியில் பாதிக்கப்படுவது யார் ? தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்கள். அவர்கள் தான் நமது ஜனத்தொகையில் முக்கால்வாசி சதவீதம். தனது ஆதர்ச கதாநாயகன் என்ன செய்தாலும் அவர்களுக்கு வேதம். இதற்கு சான்று தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர் மன்றங்கள். மக்கள் திலகம் எம்ஜி யார் தொட்ங்கி இன்று வந்த பரத் வரை தமிழ் நாட்டில் ரசிகர் மன்றம் உண்டு. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு மூன்று முதலமைச்சர்கள் சினிமா துறையிலிருந்து. வேறு என்ன அத்தாட்சி வேண்டும் ?
நம் மக்களுக்கு திரைபடத்தையும், நிஜ வாழ்கையும் பிரித்து பார்க்கும் பக்கும் கிடையாது. பகுத்தறிவு பகலவர்கள் பிறந்த இந்நாட்டில் முக்கால்வாசி ஜனங்களுக்கு எழுத்தறிவு கிடையாது. இப்படி உழலும் நம் மக்களுக்கு பருத்தி வீரன் போன்ற ஒரு படம் தேவையா ?இவர்களால் அந்த படத்தில் வரும் கதாநாயகனின் செயல்களை கொண்டாட தான் முடியுமே தவிர அதில் இருந்து படிப்பினை பெறவோ, இல்லை ஒரு கலையாக ரசிக்கவோ முடியாது. இந்த மாதிரி படங்களால் செல்லரித்து போன நமது சமுதாயம் மேலும் அழுகி போகுமே தவிர திருந்தாது, முன்னேறாது. இயக்குனர், நடிகர், நடிகை முன்னேறிவிடுவார்.
Posted by
ரிஷி
Thursday, May 8, 2008
பெங்காலி நண்பர் -2
Labels:
பகடி
மீண்டும் அதே அலுவலக பான்ட்ரி, சாயம் மணி நாலு, காலையில் சிற்றுண்டி அறுந்தி கை கழுவும் போது அப்புமா (தந்தை வழி பாட்டி) சொன்னார்
"டே !!! குதிகால அலம்ப்பு. இல்லை சனிஸ்வரன் பிடிச்சுகுவான்........."
"ஆமாம் கூகுள் மேப்ல என்ன பார்த்துகிட்டே இருக்கார்...பிடிக்கறத்துக்கு.....சாக்ஸ கழட்டி அலம்பிண்டு இருக்க நேரம் இல்ல...நான் போய்ட்டு வரேன்...பய் "
நாலு மணி வரைக்கும் நாள் ஒழுங்கா தான் போச்சு, காபி சாப்பிட போனால் வங்காள வரிகுடா பான்ட்ரியில் மையம் கொண்டு இருந்தது, அவசரத்தில் பார்க்கவில்லை.
காபி எடுத்து வெளியேறும் போது தான் சுனாமி தாக்கியது....
"வந்தே மாதரம் தெரியுமா ? யார் எழுதியது ??...."
"!!! பக்கீம் சந்திர சேட்டர்ஜி..... !!!." இப்ப அதுக்கு என்ன வந்துச்சு ??? பெரிசா எதுக்காவது அடி போடறாப்லயா ?? ஒன்னும் புரியலை ... மடையா பெங்காலி நண்பர் நினைப்பது எல்லாம் புரிந்து விட்டால் , நீ எங்கயோ போய் இருப்ப ...இங்க குப்பை கொட்டிக்கிட்டு இருக்க மாட்ட....
ஒரு அற்பத்தை பார்ப்ப்து போல் என்னை பார்த்து ....." அந்த பாட்டுக்கு டியுன் போட்டது யார்னு தெரியுமா ?"
கத்தாளை பாட்டுக்கு இசையமைத்து யாருனு சன் மியுசிக்ல் கேட்டாங்க, தெரிந்து இருந்தால் குலுக்கல் முறை தேர்வுப் போட்டிக்கு நேயர் தபால் கார்டு போட்டு இருக்கலாம்.......இதுல வந்தே மாதரத்துகா......ஆத்தா மகமாயி.... நீ தான் நாக்குல வந்து எழுதனும்....
"தெரியாது ...நீ தான் சொல்லு ?? " அங்க தான் சனீஸ்வர பகவான் கச்சேரிய ஆரம்பிக்கிறார்.....
பக்கீம் சந்திர சேட்டர்ஜி அவர் தாத்தாவுக்கு பக்கத்து வீடு போல..... எந்த சுழ்நிலையில் வந்தே மாதரம் எழுத பட்டது.... ரபீந்தரநாத் டாகுர் அதுக்கு பல கருவிகள் கொண்டு இசையமைச்சது...அரபிந்தர் பரோடாவில் அதுக்கு வேதாந்த விளக்கம் அளித்து என்று ஒரு பிரசங்க சூறாவளி நட்த்தி முடித்து விட்டார்.
மணி அறு பத்து.... நாலரை மணிக்கு மாட்டினவன், அதுவும் தனியாக.. வீட்டுக்கு போய் குதிகால டெட்டால் விட்டு கழுவ வேண்டும்
Posted by
ரிஷி
Wednesday, May 7, 2008
கடலுக்கு அப்பால் -ப.சிங்காரம்
Labels:
புத்தகம்
சமீபத்தில் தான் ப.சிங்காரம் பற்றி கேள்விப்பட்டேன். அவர் தம் வாழ்ந்நாளில் எழுதிய இரண்டு நாவல்கள், "புயலிலே ஒரு தொணி" மற்றும் "கடலுக்கு அப்பால்".
கடலுக்கு அப்பால் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூறலாம். சுதந்திர போராட்ட பதிவுகள் பல இருந்தாலும், நேதாஜியின் ஐ.ன்.ஏ இயக்கதில் இருந்த தமிழர்களை எந்த ஒரு எழுத்தாளரும் தத்ருபமாக் இந்த அளவு பதிவு செய்ததில்லை. அந்நாளில் மலயாவில் வாணிகம் செய்தவர், கூலி வேலை பார்தவர், பல வருடங்களாக அங்கே குடியேறியவர் இப்படி ஒரு சரித்திர பதிவ இன்றளவு தமிழில் வந்தது இல்லை,இனி வருமா என்பதும் சந்தேகமே. 1950ல் எழுதி 12 வருடங்கள் பதிப்பாளர் கிடைக்காமல், 1963ல் புத்தகமாக் வெளிவந்தது. இதே கதி தான் அடுத்த நாவலுக்கும். இதனால் தான் என்னவோ அவர் தம் வாழ் நாளிலே மேலும் எதுவுமே எழுதவில்லை போலும்.
செல்லையா கதையின் நாயகன், கிராமத்தில் அதிம் படித்த சுட்டிகையான பையன், வானா இனா செட்டியார் செல்லையாவின் அப்பாவின் பால் கொண்ட நட்பின் காரணமாக அவனை மலயா அழைத்து சென்று தன் கடையில் வைத்து கொண்டு வேலையும் பழகி கொடுக்கிறார். ஜப்பானியரின் குண்டு வீச்சில் மகனை பறி குடுத்த பின்னர், செல்லையாவை தன் மகன் போல் வளர்கிறார், மகள் மரகத்தை அவனுக்கு கட்டி குடுக்க நினைத்து கொண்டு இருக்கும் தருணத்தில், ஐ.ன்.ஏ ஆர்மியில் போய் செல்லையா சேர்ந்து விடுகிறான். ராணுவம் அவனை வீரம் மிகுந்த ஆண்மகனாக மாற்றி விடுகிறது, ஆனால் அதுவே அவனுக்கு மரகதத்தை மணக்க தடையாகி விடுகிறது, வட்டி தொழிலுக்கு அவன் லாயக்கு இல்லை என்று செட்டியாரை முடிவு எடுக்க தூண்டுகிறது. செல்லையாவால் மரகத்தை மறக்க முடியவில்லை. செல்லையா மரகதம் சேர்ந்தார்களா ? செட்டியார் மனது மாறியதா ? இது தான் கதை.
கதையின் களம் மிகப் புதிது, 1941 மலயா, நேதாஜி இறந்த நேரம், ஜப்பானியரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி போரில் தோற்கடித்து விட்டது, இங்கிலாந்து படைகள் வெற்றி வாகை சூடி மலயாவில் இறங்க ஆரம்பிக்க போகிறது, ஐ.ன்.ஏ முழுவதுமாக கலைந்து வீரர்கள் பொழப்பை தேடி பல ஊர்களுக்கு சிதறி சென்று விட்டனர். இந்நிலையில் செல்லையாவும் பழைய வேலை, காதலை தேடி செட்டியார் கடைக்கு வருகிறான்.
கதையின் அனைத்து கதாப்பாதிரமும் உயிருடன் நம் முன் உலவுவது போல் அவ்வளவு தத்ருபமாக சித்தரிக்கப் பட்டுள்ளது. செல்லையாவின் நண்பன் மாணிக்கம், வேலையாம் கருப்பையா, மலயா இன்ஸ்பக்டர் இப்படி சொல்லி கொண்டே போகலாம். கதையின் ஊடே மெல்லிய நகைச்சுவை பரவலாக காண கிடைப்பது கதையின் ஓட்டத்துக்கு பெரிய பலம். முக்கியமாக மாணிக்கம் செல்லையா சம்பாஷனைகள்.
"அறுவது சினம் சீறுவது பிழை, உணர்க"
"உணர்ந்தனம்"
"கண்ணகி போன்றவர் பெண் தெய்வங்கள், கும்பிடலாம் பெண்டாள முடியாது....அதனால் தான் கோவலன் மாதவியை தேடி சென்றான்....."
"எப்போழுது கண்ணகியை திரும்பி தேடி வந்தானோ, உடனே கொல்லப் பட்டான்...."
"மரகதம் போன்றோர் கண்ணகி போன்றோர், ஆகவே அவளை மற்ந்து விடு"
மலயா இன்ஸ்பக்டர் ..."எனக்கு டாமில் சரியா வராதுனு கெலி பன்ன ப்டாது........... லிக்கர் ஒன்லி ஆப்டர் சன் செட்... இப்போ இந்த சனியன் கொப்பிய கொடு"
கதையின் இன்னொரு பலம் வட்டார வழக்கு, செட்டியார் அடிக்கடி கூறும் "வேல் மயிலம் !!! முருகா" , மரகதம் பேசும் முறை "செய்வீகளா, மாறமாட்டீகளே...." ஆன்டி பாஸிஸ்ட்டு காப்டன் கிம் லீ பேசும ஆங்கிலம் கலந்த மலயா தமிழ்
தமிழ் வாசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்
http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%AA+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
என்றுமே நல்ல தரமான் எழுத்தை அதன் சிருக்ஷ்டிகர்தா மறைந்த பின் தான் இந்த சமுதாயம் அங்கீகரிக்கும் போல.
Posted by
ரிஷி
Tuesday, May 6, 2008
பெங்காலி நண்பர் - I
Labels:
பகடி
அலுவலகத்தில் எனது பெங்காலி நண்பர் ஒரு சுவாரசியமான பேர்வழி. எந்த ஒரு விஷயத்தையும் மதிப்பீடு செய்ய தயங்கவே மாட்டார் (அது பெங்காலியரின் பிறவி குணம் என்று
கேள்வி பட்டது உண்டு.) ஐ.பி.ல், ஹுன்டாய் ஐ10, கர்நாடக அரசியல், சிவசெனா அமிதாப் மீது அவதூறு,ரஜினியின் சுப்பர் ஸ்டார் அந்தஸ்து, அராசாங்க ஊழியர் சம்பள மறுஆய்வு,
அவர் வீட்டு அருகில் கிடைக்கும் சிக்கன் மஸாலா, ஒரு வயது வரை அவர் மகன் பேசாதது இப்படி எண்ணில் அடங்காது அவரின் பிரசங்க தலைப்புகள்.
அறு அடிக்கு கொஞ்சம் குறைச்சல் உயரம், நீண்ட முகம், எலுமிச்சை நிறம், கருப்பும் செம்பட்டையும் கலந்த முடி நிறம்,புனைக்கண், முன் தொந்தி, தளர்ந்த நடை, சிறிது நேரம் முன்பு
தான் மயக்கம் தெளிந்தது போன்ற பார்வை. பொதுவாக இப்படி தான் தோற்றம் தருவார். வயது முப்பதை கடந்தாலும், உடை அனிவது பருவப் பையன் போல தான். கிளிப் பச்சை
நிறத்து போலி போலோ டி க்ஷர்டு அவர் விருப்ப உடை, வாரத்தில் இரண்டு நாள் அந்த அலங்காரத்தில் காட்சி தருவார்.
பொதுவாக நாங்கள் அவருக்கு இறையாகும் நேரம் மதிய சாப்பாடு முடிந்து அலுவலம் அருகே இருக்கும் பொட்டி கடைக்கு புகை ஊத / பாக்கு போட போகும் நெரம். முன்கூட்டியே
அங்கு நின்று கொண்டு இருப்பார். கேள்வி தயாராக இருக்கும். "பங்கு சந்தையின் போக்கை வெளிநாட்டு முதளிட்டாளர்கள் ஆட்டி படைக்கிறார்கள், ரிசர்வ் பேங்க் சேர்மன் ரெட்டி
கண்டு கொள்வது இல்லை !!" என்று ஒரு வாக்கியத்தை வீசுவார், நாம் அதை கேள்வி என்று எண்ணி பதில் சொல்ல எத்தனித்தால் அது மடமை !! நாம் வாயை துறக்கும் முன் அவரே
தொடர்வார். "ரெட்டி சுழ்நிலை கைதி....ப.சிதம்பரம் சொல்வதை செயலாக்கம் செய்வதை அவர் வேலை. வளரும் பண வீக்கத்திலிருந்து நம்மை (?) திசை திருப்பவே பங்கு சந்தை
முதளீட்டை பெருக்குவது போல் நாடகம் ஆடுகிறார்." கேள்வியும் நானே, பதிலும் நானே அது தான் அவர் தம் பாலிஸி.
பெட்டி கடை அத்தியாயம் முடிந்து, சாயம் நாலு மணி போல் ஒரு சில பேர் அலுவலக காப்பி குடிக்க பேண்ட்ரி செல்வர். அங்கே காபி, டீ (அதில் பல வகை எலக்காய், துளசி
இத்யாதி...) வைக்கப் பட்டு இருக்கும். அங்கே அவர் முன் யாராவது காபி குடித்து விட்டால் தொலைந்தார்கள்...ஹர்பல் டியின் மகத்துவத்தை பற்றி பிரசங்கம் தொடங்கிவிடும். "எப்படி பீர் சுவை
போக போக தான் தெரியுமோ அப்படி தான் நாம் ஹர்பல் டீ ருசியை அறிய முடியும். சீனி துண்டு ஒன்று கலக்கலாம் ஆனால் சீனி இன்றி குடித்தால் தான் முழு பயன் அடைய முடியும்.
அறு மாத காலமாக அவர் காப்பி தொடுவது இல்லை. சுடு தண்ணி போன்ற சுவை (?) நம் நாவை கட்டி போட்டு விடும், அப்பறம் நாம் காபியை எறு எடுத்தும் பார்க்க மாட்டோம்." அதற்க்கு சுடு தண்ணியே குடிக்கலாமேனு சொன்னா தொலைந்தோம்... துளசியின் மகிமை பற்றி மீண்டும் ஒரு பிரசங்கம்.

Subscribe to:
Posts (Atom)