Tuesday, May 6, 2008

பெங்காலி நண்பர் - I

அலுவலகத்தில் எனது பெங்காலி நண்பர் ஒரு சுவாரசியமான பேர்வழி. எந்த ஒரு விஷயத்தையும் மதிப்பீடு செய்ய தயங்கவே மாட்டார் (அது பெங்காலியரின் பிறவி குணம் என்று
கேள்வி பட்டது உண்டு.) ஐ.பி.ல், ஹுன்டாய் ஐ10, கர்நாடக அரசியல், சிவசெனா அமிதாப் மீது அவதூறு,ரஜினியின் சுப்பர் ஸ்டார் அந்தஸ்து, அராசாங்க ஊழியர் சம்பள மறுஆய்வு,
அவர் வீட்டு அருகில் கிடைக்கும் சிக்கன் மஸாலா, ஒரு வயது வரை அவர் மகன் பேசாதது இப்படி எண்ணில் அடங்காது அவரின் பிரசங்க தலைப்புகள்.
அறு அடிக்கு கொஞ்சம் குறைச்சல் உயரம், நீண்ட முகம், எலுமிச்சை நிறம், கருப்பும் செம்பட்டையும் கலந்த முடி நிறம்,புனைக்கண், முன் தொந்தி, தளர்ந்த நடை, சிறிது நேரம் முன்பு
தான் மயக்கம் தெளிந்தது போன்ற பார்வை. பொதுவாக இப்படி தான் தோற்றம் தருவார். வயது முப்பதை கடந்தாலும், உடை அனிவது பருவப் பையன் போல தான். கிளிப் பச்சை
நிறத்து போலி போலோ டி க்ஷர்டு அவர் விருப்ப உடை, வாரத்தில் இரண்டு நாள் அந்த அலங்காரத்தில் காட்சி தருவார்.

பொதுவாக நாங்கள் அவருக்கு இறையாகும் நேரம் மதிய சாப்பாடு முடிந்து அலுவலம் அருகே இருக்கும் பொட்டி கடைக்கு புகை ஊத / பாக்கு போட போகும் நெரம். முன்கூட்டியே
அங்கு நின்று கொண்டு இருப்பார். கேள்வி தயாராக இருக்கும். "பங்கு சந்தையின் போக்கை வெளிநாட்டு முதளிட்டாளர்கள் ஆட்டி படைக்கிறார்கள், ரிசர்வ் பேங்க் சேர்மன் ரெட்டி
கண்டு கொள்வது இல்லை !!" என்று ஒரு வாக்கியத்தை வீசுவார், நாம் அதை கேள்வி என்று எண்ணி பதில் சொல்ல எத்தனித்தால் அது மடமை !! நாம் வாயை துறக்கும் முன் அவரே
தொடர்வார். "ரெட்டி சுழ்நிலை கைதி....ப.சிதம்பரம் சொல்வதை செயலாக்கம் செய்வதை அவர் வேலை. வளரும் பண வீக்கத்திலிருந்து நம்மை (?) திசை திருப்பவே பங்கு சந்தை
முதளீட்டை பெருக்குவது போல் நாடகம் ஆடுகிறார்." கேள்வியும் நானே, பதிலும் நானே அது தான் அவர் தம் பாலிஸி.

பெட்டி கடை அத்தியாயம் முடிந்து, சாயம் நாலு மணி போல் ஒரு சில பேர் அலுவலக காப்பி குடிக்க பேண்ட்ரி செல்வர். அங்கே காபி, டீ (அதில் பல வகை எலக்காய், துளசி
இத்யாதி...) வைக்கப் பட்டு இருக்கும். அங்கே அவர் முன் யாராவது காபி குடித்து விட்டால் தொலைந்தார்கள்...ஹர்பல் டியின் மகத்துவத்தை பற்றி பிரசங்கம் தொடங்கிவிடும். "எப்படி பீர் சுவை
போக போக தான் தெரியுமோ அப்படி தான் நாம் ஹர்பல் டீ ருசியை அறிய முடியும். சீனி துண்டு ஒன்று கலக்கலாம் ஆனால் சீனி இன்றி குடித்தால் தான் முழு பயன் அடைய முடியும்.
அறு மாத காலமாக அவர் காப்பி தொடுவது இல்லை. சுடு தண்ணி போன்ற சுவை (?) நம் நாவை கட்டி போட்டு விடும், அப்பறம் நாம் காபியை எறு எடுத்தும் பார்க்க மாட்டோம்." அதற்க்கு சுடு தண்ணியே குடிக்கலாமேனு சொன்னா தொலைந்தோம்... துளசியின் மகிமை பற்றி மீண்டும் ஒரு பிரசங்கம்.

No comments: