Friday, May 9, 2008

சினிமா மினிமா




சினிமா என்ற் ஊடகத்தின் அதி முக்கியமான வேலை மக்களுக்கு பொழுது போக்குச் சாதனமாகச் செயல்படுவது தான். அந்த வேலையை மிகை இல்லாமல் செய்ய வேண்டும், சில படிப்பினையை ஊட்டலாம், சிரித்து மகிழ அனைவர் மனதும் புண்படாதவாறு காட்சிகளை காட்டலாம், கவிதை, இசை ஆகிய கலைகளின் நுட்பத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம். இதனால் சினிமாவும் மேண்படும், அதை பார்க்கும் சமுதாயமும் மேண்படும். நல்ல கருத்துக்களை பொழுது போக்கு அம்சத்தோடு மக்களுக்கு அளிக்கும் சினிமாவே மிக உன்னதமான சினிமா.
மனித மனத்தின் வக்கிர பகுதிகளை பதிவு செய்வது, மிகைபடுத்த பட்ட மனிதர்களை காண்பித்து உசுப்பேத்தி விடுவது, செயற்கை செய்கைகளை பிராமதப்படுத்தி காண்பிப்பது, இத்தகைய செயல்களே இன்றைய சினிமாவின் தலையான வேலையாக உள்ளது.
கலைஞர் டிவி யில் தமிழ் புத்தாண்டு அன்று சாயம் நாலு மணி முதல் இரவு 8 மணி வரை பருத்தி வீரன் என்ற படம் ஓளிபரப்பபட்டது. பல விருதுகளை குவித்த படம், வெளிநாடுகளில் பாராட்டப் பட்ட படம். வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி படம். ஆனால் எதை பதிவு செய்தது ?தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராம நிகழ்வுகளையா ?, அங்கே இருக்கும் மனிதர்களின் வாழ்வையா ?
இயக்குனரின் நோக்கம் என்ன ?
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதி வெறியோடு பெண் மண் போதை இவையே வாழ்க்கை என்று அலைபவன் ஒருவனின் காதல் கதையை பலவித பொழுது போக்கு அம்சத்தோடு (? முக்கியமான பொழுதுபோக்கு, திருநங்கைகளை வைத்து ஒரு கேலி கூத்து.) கூறி இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தோடு முடித்து, படித்த மக்களின் மத்தியில் இப்படியும் ஜனங்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று காட்டி நல்ல பெயர் எடுப்பது.
நல்ல லாபம் சம்பாரிப்பது, மிகச்சிலரே இப்படி படம் எடுப்பர் ஆகையால் அனைத்து விருது வழங்கும் விழாக்களுக்கு அனுப்பி வைத்து, கிடைக்கும் விருதுகளை வாங்கி, அங்கே மெடையில் ஒரு அறிவு ஜீவித்தனமான உரை அற்றுவது.
இத்தனையும் முடித்து அவர் அடுத்த படத்திற்க்கு போய் விடுவார், அவரை பாராட்டிய படித்த கூட்டமும் தங்களின் மற்ற வேலைகளை கவனிக்க போய் விடுவார், இறுதியில் பாதிக்கப்படுவது யார் ? தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்கள். அவர்கள் தான் நமது ஜனத்தொகையில் முக்கால்வாசி சதவீதம். தனது ஆதர்ச கதாநாயகன் என்ன செய்தாலும் அவர்களுக்கு வேதம். இதற்கு சான்று தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர் மன்றங்கள். மக்கள் திலகம் எம்ஜி யார் தொட்ங்கி இன்று வந்த பரத் வரை தமிழ் நாட்டில் ரசிகர் மன்றம் உண்டு. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு மூன்று முதலமைச்சர்கள் சினிமா துறையிலிருந்து. வேறு என்ன அத்தாட்சி வேண்டும் ?
நம் மக்களுக்கு திரைபடத்தையும், நிஜ வாழ்கையும் பிரித்து பார்க்கும் பக்கும் கிடையாது. பகுத்தறிவு பகலவர்கள் பிறந்த இந்நாட்டில் முக்கால்வாசி ஜனங்களுக்கு எழுத்தறிவு கிடையாது. இப்படி உழலும் நம் மக்களுக்கு பருத்தி வீரன் போன்ற ஒரு படம் தேவையா ?இவர்களால் அந்த படத்தில் வரும் கதாநாயகனின் செயல்களை கொண்டாட தான் முடியுமே தவிர அதில் இருந்து படிப்பினை பெறவோ, இல்லை ஒரு கலையாக ரசிக்கவோ முடியாது. இந்த மாதிரி படங்களால் செல்லரித்து போன நமது சமுதாயம் மேலும் அழுகி போகுமே தவிர திருந்தாது, முன்னேறாது. இயக்குனர், நடிகர், நடிகை முன்னேறிவிடுவார்.

No comments: