மீண்டும் அதே அலுவலக பான்ட்ரி, சாயம் மணி நாலு, காலையில் சிற்றுண்டி அறுந்தி கை கழுவும் போது அப்புமா (தந்தை வழி பாட்டி) சொன்னார்
"டே !!! குதிகால அலம்ப்பு. இல்லை சனிஸ்வரன் பிடிச்சுகுவான்........."
"ஆமாம் கூகுள் மேப்ல என்ன பார்த்துகிட்டே இருக்கார்...பிடிக்கறத்துக்கு.....சாக்ஸ கழட்டி அலம்பிண்டு இருக்க நேரம் இல்ல...நான் போய்ட்டு வரேன்...பய் "
நாலு மணி வரைக்கும் நாள் ஒழுங்கா தான் போச்சு, காபி சாப்பிட போனால் வங்காள வரிகுடா பான்ட்ரியில் மையம் கொண்டு இருந்தது, அவசரத்தில் பார்க்கவில்லை.
காபி எடுத்து வெளியேறும் போது தான் சுனாமி தாக்கியது....
"வந்தே மாதரம் தெரியுமா ? யார் எழுதியது ??...."
"!!! பக்கீம் சந்திர சேட்டர்ஜி..... !!!." இப்ப அதுக்கு என்ன வந்துச்சு ??? பெரிசா எதுக்காவது அடி போடறாப்லயா ?? ஒன்னும் புரியலை ... மடையா பெங்காலி நண்பர் நினைப்பது எல்லாம் புரிந்து விட்டால் , நீ எங்கயோ போய் இருப்ப ...இங்க குப்பை கொட்டிக்கிட்டு இருக்க மாட்ட....
ஒரு அற்பத்தை பார்ப்ப்து போல் என்னை பார்த்து ....." அந்த பாட்டுக்கு டியுன் போட்டது யார்னு தெரியுமா ?"
கத்தாளை பாட்டுக்கு இசையமைத்து யாருனு சன் மியுசிக்ல் கேட்டாங்க, தெரிந்து இருந்தால் குலுக்கல் முறை தேர்வுப் போட்டிக்கு நேயர் தபால் கார்டு போட்டு இருக்கலாம்.......இதுல வந்தே மாதரத்துகா......ஆத்தா மகமாயி.... நீ தான் நாக்குல வந்து எழுதனும்....
"தெரியாது ...நீ தான் சொல்லு ?? " அங்க தான் சனீஸ்வர பகவான் கச்சேரிய ஆரம்பிக்கிறார்.....
பக்கீம் சந்திர சேட்டர்ஜி அவர் தாத்தாவுக்கு பக்கத்து வீடு போல..... எந்த சுழ்நிலையில் வந்தே மாதரம் எழுத பட்டது.... ரபீந்தரநாத் டாகுர் அதுக்கு பல கருவிகள் கொண்டு இசையமைச்சது...அரபிந்தர் பரோடாவில் அதுக்கு வேதாந்த விளக்கம் அளித்து என்று ஒரு பிரசங்க சூறாவளி நட்த்தி முடித்து விட்டார்.
மணி அறு பத்து.... நாலரை மணிக்கு மாட்டினவன், அதுவும் தனியாக.. வீட்டுக்கு போய் குதிகால டெட்டால் விட்டு கழுவ வேண்டும்
No comments:
Post a Comment