Wednesday, May 7, 2008

கடலுக்கு அப்பால் -ப.சிங்காரம்


சமீபத்தில் தான் ப.சிங்காரம் பற்றி கேள்விப்பட்டேன். அவர் தம் வாழ்ந்நாளில் எழுதிய இரண்டு நாவல்கள், "புயலிலே ஒரு தொணி" மற்றும் "கடலுக்கு அப்பால்".

கடலுக்கு அப்பால் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூறலாம். சுதந்திர போராட்ட பதிவுகள் பல இருந்தாலும், நேதாஜியின் ஐ.ன்.ஏ இயக்கதில் இருந்த தமிழர்களை எந்த ஒரு எழுத்தாளரும் தத்ருபமாக் இந்த அளவு பதிவு செய்ததில்லை. அந்நாளில் மலயாவில் வாணிகம் செய்தவர், கூலி வேலை பார்தவர், பல வருடங்களாக அங்கே குடியேறியவர் இப்படி ஒரு சரித்திர பதிவ இன்றளவு தமிழில் வந்தது இல்லை,இனி வருமா என்பதும் சந்தேகமே. 1950ல் எழுதி 12 வருடங்கள் பதிப்பாளர் கிடைக்காமல், 1963ல் புத்தகமாக் வெளிவந்தது. இதே கதி தான் அடுத்த நாவலுக்கும். இதனால் தான் என்னவோ அவர் தம் வாழ் நாளிலே மேலும் எதுவுமே எழுதவில்லை போலும்.

செல்லையா கதையின் நாயகன், கிராமத்தில் அதிம் படித்த சுட்டிகையான பையன், வானா இனா செட்டியார் செல்லையாவின் அப்பாவின் பால் கொண்ட நட்பின் காரணமாக அவனை மலயா அழைத்து சென்று தன் கடையில் வைத்து கொண்டு வேலையும் பழகி கொடுக்கிறார். ஜப்பானியரின் குண்டு வீச்சில் மகனை பறி குடுத்த பின்னர், செல்லையாவை தன் மகன் போல் வளர்கிறார், மகள் மரகத்தை அவனுக்கு கட்டி குடுக்க நினைத்து கொண்டு இருக்கும் தருணத்தில், ஐ.ன்.ஏ ஆர்மியில் போய் செல்லையா சேர்ந்து விடுகிறான். ராணுவம் அவனை வீரம் மிகுந்த ஆண்மகனாக மாற்றி விடுகிறது, ஆனால் அதுவே அவனுக்கு மரகதத்தை மணக்க தடையாகி விடுகிறது, வட்டி தொழிலுக்கு அவன் லாயக்கு இல்லை என்று செட்டியாரை முடிவு எடுக்க தூண்டுகிறது. செல்லையாவால் மரகத்தை மறக்க முடியவில்லை. செல்லையா மரகதம் சேர்ந்தார்களா ? செட்டியார் மனது மாறியதா ? இது தான் கதை.

கதையின் களம் மிகப் புதிது, 1941 மலயா, நேதாஜி இறந்த நேரம், ஜப்பானியரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி போரில் தோற்கடித்து விட்டது, இங்கிலாந்து படைகள் வெற்றி வாகை சூடி மலயாவில் இறங்க ஆரம்பிக்க போகிறது, ஐ.ன்.ஏ முழுவதுமாக கலைந்து வீரர்கள் பொழப்பை தேடி பல ஊர்களுக்கு சிதறி சென்று விட்டனர். இந்நிலையில் செல்லையாவும் பழைய வேலை, காதலை தேடி செட்டியார் கடைக்கு வருகிறான்.

கதையின் அனைத்து கதாப்பாதிரமும் உயிருடன் நம் முன் உலவுவது போல் அவ்வளவு தத்ருபமாக சித்தரிக்கப் பட்டுள்ளது. செல்லையாவின் நண்பன் மாணிக்கம், வேலையாம் கருப்பையா, மலயா இன்ஸ்பக்டர் இப்படி சொல்லி கொண்டே போகலாம். கதையின் ஊடே மெல்லிய நகைச்சுவை பரவலாக காண கிடைப்பது கதையின் ஓட்டத்துக்கு பெரிய பலம். முக்கியமாக மாணிக்கம் செல்லையா சம்பாஷனைகள்.

"அறுவது சினம் சீறுவது பிழை, உணர்க"

"உணர்ந்தனம்"

"கண்ணகி போன்றவர் பெண் தெய்வங்கள், கும்பிடலாம் பெண்டாள முடியாது....அதனால் தான் கோவலன் மாதவியை தேடி சென்றான்....."

"எப்போழுது கண்ணகியை திரும்பி தேடி வந்தானோ, உடனே கொல்லப் பட்டான்...."

"மரகதம் போன்றோர் கண்ணகி போன்றோர், ஆகவே அவளை மற்ந்து விடு"

மலயா இன்ஸ்பக்டர் ..."எனக்கு டாமில் சரியா வராதுனு கெலி பன்ன ப்டாது........... லிக்கர் ஒன்லி ஆப்டர் சன் செட்... இப்போ இந்த சனியன் கொப்பிய கொடு"

கதையின் இன்னொரு பலம் வட்டார வழக்கு, செட்டியார் அடிக்கடி கூறும் "வேல் மயிலம் !!! முருகா" , மரகதம் பேசும் முறை "செய்வீகளா, மாறமாட்டீகளே...." ஆன்டி பாஸிஸ்ட்டு காப்டன் கிம் லீ பேசும ஆங்கிலம் கலந்த மலயா தமிழ்

தமிழ் வாசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்

http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%AA+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

என்றுமே நல்ல தரமான் எழுத்தை அதன் சிருக்ஷ்டிகர்தா மறைந்த பின் தான் இந்த சமுதாயம் அங்கீகரிக்கும் போல.

1 comment:

கதிர் said...

போரினை அடிப்படையாக/புலம்பெயர்ந்த நாவல்கள்னு சொன்னா புயலிலே ஒரு தோணி மட்டும்தான் சொல்ல முடியும். அந்தளவுக்கு தரமான நாவல் அது.

என்னோட பதிவை பாத்துட்டு வாங்கினதுக்காக நன்றி.