Tuesday, August 5, 2008

பழைய சோறு

"பழைய சோறு உண்டு வாழ்ந்தாரே வாழ்ந்தார்
மற்றவர் எல்லாம் வயத்தால போய் ஓய்ந்தார்"

பழைய சோறு தின்ற மயக்கத்துல வள்ளுவர் இந்த குறள எழுத மறந்து இருப்பார். தமிழ்நாட்டு தேசிய டிபன், லஞ்ச், டின்னர் இதுதான். சும்மா காலையில் தயிர் இல்ல மோர் விட்டு, ஊருகா, மாவடு போட்டு அடிச்சா அன்னிக்கு நாள் முழுக்க நிறைவா இருக்கும். ஒரு விதமான மயக்கத்தோடு திரியலாம்.

வாரம் முழுக்க விதம் விதமாக டிபன் பழைய சோறு மூலம் தயாரிக்கலாம். சாதா பழைய சோறு - சும்மா மோர் உப்பு போட்டு, ஸ்பெஷல் - மோர், உப்பு, கடுகு தாளித்து, வெங்காய ஸ்பெஷல் - மோர், உப்பு, கடுகு கூட வெங்காயம் தாளித்து, ராயல் ஸ்பெஷல் - வெங்காய ஸ்பெஷல்லில் மோருக்கு பதில் கெட்டி தயிர். வெஜிடேரியன் எக்ஸ்ட்ரா வெகன்சா - கெட்டி தயிர், உப்பு (கல் உப்பு இருந்தா சூப்பர்),வெங்காயம், தக்காளி,கடுகு தாளித்து, காரட் துருவி போட்டு தக்காளிய வட்டமா நறுக்கி போட்டு அலாங்கரிச்சு, கொஞ்சம் கொத்தமல்லி போட வேண்டும். வாரத்தில் அஞ்சு நாளைக்கு சரியா போச்சா.......

எனக்கு தெரிஞ்ச நாடார் ஒருத்தர், பழைய சோறில் நல்லெண்ணை விட்டு, இரண்டு நாட்டு வழைப்பழம் போட்டு பிசைந்து சாப்பிடுவார்.

Friday, August 1, 2008

குசேலன் - பி வாசுவிடம் சில கேள்விகள்.....

கன்னடத்துல எடுத்து பயிற்சி செய்யாமல் ஏன் தமிழ்ல குசேலன் எடுக்கப்பட்டது ?

உங்களுக்கு ஏன் சார் இந்த கொலை வெறி ? இது தான் தீவிரவாத இயக்கமா (Terrorist Direction ) ?

நீங்க எந்த நூற்றாண்ட சேர்ந்தவர் ??? தமிழ் சினிமா முன்னேறக்கூடாதுனு உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ?

நாலு கதாப்பாத்திரத்தை வைத்து எடுக்க வேண்டிய படத்தை நானூறு பேர் வைத்து எடுத்து ஏன் ? வையாபுரி, கிருஷ்ணன்,பாஸ்கர்,மயில்சாமி,லிவிங்க்ஸ்டன், சந்தான பாரதி,சந்தானம்,மதன் பாப்,விஜயகுமார்,மனோபாலா இப்படி அல்லகைக்கு எல்லாம் வாய்ப்பு குடுத்த நீங்க வெண்ணிற ஆடை முர்த்தி மேல மட்டும் ஏன் ஓர வஞ்சனை ? ஒரு குருக்கள் வேடம் குடுத்தா தான் என்ன ? "ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர் , டே...ப்ரஹ்மஹத்தி ஓரமா போட ...." அவர் ஸ்டைல்ல பேசிகிட்டு இருப்பார்..... அதை மாதிரி தான் வாலிக்கும் ஒரு வேஷம் !!!! எப்படியோ கும்பல வெச்சு கோவிந்தா போடறதுன்னு முடிவு ஆச்சு ....எல்லாரையும் மொத்தமா கூப்பிடு இருக்கலாம் ........

தலைவர் introduction scene கூட காபி அடிக்கணுமா ? நட்டு உதவி இயக்குனர் தான் உங்கள சுத்தி இருக்காங்க போல !!! Mask of the Zorrow, House of Flying Dagers, இப்படி தமிழ் நாட்டுல சக்கை போடு போட்ட படத்தில் இருந்தா உல்டா அடிக்கனும் ? கொரியன் படம் பார்க்க சொல்லுங்க .. இப்ப எல்லாம் விஜய் டிவில தமிழ் டப்பிங் போடறாங்க......

கேள்விகள் தொடரும்........

குசேலன் படமும் சில விண்ணப்பங்களும்......

கேரளா முதலமைச்சருக்கு ஒரு விண்ணப்பம் !!! தயவு கூர்ந்து கேரளா சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அழைத்து சோட்டாநிகர கோவில்ல வெச்சு "இனி நாங்க யாரும் பி.வாசுவுக்கு பட உரிமை விக்க மாட்டோம்னு!!!" சத்தியம் வாங்கிட்டார்னா... தமிழ் நாட்டு ஜனங்க நாங்க எல்லாரும் அவரும் அவர் வாரிசுகளும் தான் நிரந்தர கேரளா முதலமைச்சர்களாக இருக்கணும்னு எங்க ஊரு மாரியம்மனுக்கு மண் சோறு சாப்பிடுவோம்னு உறுதி குடுக்கறோம்.....

பி வாசு, நீங்க Rapist சந்தான பாரதிய முத்துக்காளைக்கு போட்டியா கொண்டுவந்துட்டிங்க....இனிமே அவர் தான் எல்லா காமெடியனுக்கும் எடுபொடி.... அதனால அவரோடு பதவிய நீங்க எடுத்துக்கலாம்....வில்லனா நடிச்ச அனுபவம் உங்களுக்கு நிறைய உண்டு.....

அக்கா சௌந்தர்யா, ஒரு விண்ணப்பம், சாலமன் பாப்பையாவின் உதவியாளர் வள்ளுவர் சொன்ன மாதிரி "கற்க கசடற கற்க", நீங்க அனிமேஷன் புலி தான்...கசடறக் கத்துக்கிட்டாச்சு...."நிற்க அதற்கு தக" அதுல தான் சறுக்குது...பின்தங்கிய கிராமத்து நதில டால்பின் காட்டி தான் உங்க திறமை எங்களுக்கு தெரியனும்னு அவசியம் இல்ல.....கிருபானந்த வாரியார்... சாரி சுல்தான் வாரியார் படத்துல நாங்க பார்த்துக்குறோம்... இனி அட்ட படத்துக்கெல்லாம் கிராபிக்ஸ் போடாதிங்க்கா ....அப்பறம் முகவை குமார் (சாரி நடிப்பு சுறாவளி ரித்திஷ்) படத்துக்கு எல்லாம் கூப்பிடுவாங்க..நீங்க ஹாலிவுட் போக வேண்டியவங்க......

பசுபதி சார், கமல் எப்பவுமே அவர் புது படம் பற்றி சொல்லும் போது, "இந்த படத்துல என்னோட கதாப்பாத்திரத்தை விட கூட நடிப்பவர் ரோல் தான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது....எனக்கே அந்த ரோல் பண்ண வேண்டும் போல இருந்தது" இப்படி பிட்ட போடுவார். படம் பார்த்தா.....கூட நடிச்சவர் நாலு ரில் கமல் கிட்ட நின்று விட்டு காணாமல் போய்விடுவார். இப்படி தன் படத்தில் அர்ஜுன், பிரபு, நேப்போலியன், போல பலருக்கு ஆப்பு வெச்சு இருக்கார். நீங்க மட்டும் தான் விதி விலக்கு !!! விருமாண்டி, "மரண கிணறு மனிஷா கொய்ராலா" படம், இரண்டுமே உங்களோட நடிப்புக்குச் சான்று, "ஒரு பானை சோறுக்கு இரு சோறு பதம்"....
குசேலன்ல நம்ம ரோல் காமெடியா, கதாநாயகனா, கேரக்டர் ரோலா இப்படி குழப்பத்தில் திரிஞ்ச மாதிரி தோனுது.... . இனிமே விஷப்பரிட்சை எல்லாம் வேண்டாம் சார், உங்க நடிப்புக்கு சரியான தீனி போட படம் வரும் வரை
நீங்க பட்டாசு பாலு ரோல் பண்ணுங்க சார், நாங்க பார்க்கறோம்.

படத்தில் மிக நன்றாக நடித்திருப்பது(!!!) மனோபாலா, ர சுந்தரராஜன்,லிவிங்க்ஸ்டன்,கிருஷ்ணன்,மயில்சாமி. இதுக்கு மேல அவங்க கிட்ட எதிர் பார்க்க முடியாது. keep up the good work...உங்கள் சேவை தமிழ் சினிமாவுக்கு தேவை......(இதுல பாதி பேர் முன்னால் இயக்குனர்கள்......தமிழ் சினிமாவுக்கு ஆயுசு கெட்டி !!!! இவங்க இயக்கி கொலை செஞ்சது போதாதுனு இப்போ நடிப்பு வேற...)

தலைவா !!! ஆறில் இருந்து அறுபது வரை magic உங்களுக்கு re-create பண்ண இளம் தமிழ் இயக்குனர் நிறைய இருக்காங்க. நீங்க ஓல்ட் wine..எந்த இயக்குனர் இயக்கினாலும் படம் சில்வர் ஜூப்ளி....உங்க குரு பாலசந்தர் வெச்சு தில்லு முள்ளு part II எடுக்கலாம், இந்திரன் சந்திரன் ஆக நீங்க வந்தா திரை அரங்கே திம்மிலோல் படும். அமீர் கிட்ட சொன்னா பரட்டை வெச்சு அரட்டிற மாட்டாரா !!! வசந்த பாலன், பாலாஜி சக்தி வேல், இப்படி தவமாய் தவம் இருந்து உங்கள வெச்சு பின்னிடுவாங்க. அப்பறம் எதுக்கு சார் இந்த கருமாந்திரம் எல்லாம், பெங்களூர்ல ஒரு சில இடத்தில், கர்நாடக ரக்ஷன வேதிகே பசங்கள சமாளிக்க, குசேலன் படம் மதியமே போட்டு காட்டினார்கள் !!!! இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு நாம நேரத்தை வீணாக்க வேண்டாம்னு திரும்பி போய்டாங்க. சந்திரமுகில வடிவேல் "வேணாம்னே இவன் நம்ம வீட்டுக்கு வேண்டாம்" சொல்லுவார், அது மாதிரி தலைவா "நமக்கு பி வாசு வேண்டாம்....."