Wednesday, December 24, 2008

திரு அடிகள் - 1

தாயறிந்து ஊணறிந்து உலகறிந்தாயினும்
தானறிந்து திருமாகாலறியும் அறிவே அறிவு

சேய்க்கு ஊன் விருத்தம்
சிறார்க்கு கெலி விருத்தம்
வாலிபருக்கு திரை விருத்தம்
திருமாலடி வேண்டுவர்க்கு திருவிருத்தம்.

Saturday, November 15, 2008

வாங்க குளிக்கலாம்….

தொடர்ந்து வரும் பெட்ரோல் விலை ஏற்றம், நமக்கு மட்டும் பிரச்சனை இல்லை, பெட்ரோல் பங்க்குகளுக்கும் தான். தனியார் பங்க்குகள், அரசாங்க பங்க்குகளுடன் விலையில் போட்டி போட முடிவதில்லை. விளைவு… வாடிக்கையாளர்களை கஸ்டமர் ஸர்வீஸ் என்ற பெயரில் குஷிப்படுத்துவது.

இந்தியன் ஆயிலை விட ஷெல் மூன்று ருபாய் விலை ஜாஸ்தி. ஷெல் சென்றால் பெட்ரோல் தவிற மற்ற அனைத்தையும் பற்றி பேசுவார்கள்.

மொத்தமும் பெண் ஊழியர்கள் தான். உள்ள போனவுடன், ஒரு வணக்கம். அப்பறம் வேகமா விலையை கூறிவிட்டு, சேவையை ஆரம்பிப்பாங்க,

“ஸார் விண்டுஷீல்டு கீளின் பண்ணவா ?”

“டயர் பாலிஷ் போடவா ?”

“எதாவது ஸனேக்ஸ் சாப்பிடுங்க… பில் போடற இடத்தில் தான் இருக்கு..?”

இது எல்லாம் முடிந்து கிளம்பும் போது ஒரு டாட்டா வேற…பொண்டாட்டி கூட அலுவலம் போகும் போது இப்படி வழியனுப்பினது இல்லை.

இன்னும் போக போக என்னவெல்லாம் வருமோ ?

 

“சார் குளிப்பாட்டி விடவா ?”

”ஒரு குவிக் ஷேவிங் ?”

“குழந்தைக்கு டயபர் மாத்தனுமா ?”

”கேரளா ஆயில் மஸாஜ் இருக்கு…”

“இன்னிக்கு சனிக்கிழமை, சனி நீறாடனும், எண்ணை தேய்த்து குளிச்சு விடவா ?”

Friday, November 14, 2008

நமிதா ,குஷ்பு – என் காதலை உணர்……

சாலைகளில் செல்லும் போது நாம் எல்லாரும் லாரிகள், டெம்போ மற்றும் ஆட்டோக்களின் பின்னால் எழுதியிருப்பதை பார்த்து இருப்போம். பெங்களுர் போன்ற நகரில் சாலையில் டராபிக்கில் ஊர்ந்து செல்லும் வேளை, அந்த எழுத்துக்கள் தான் நல்ல டைம் பாஸ். பல சமயம் மிகச் சாதாரணமாக இருக்கும், சில சிரிப்பை வரவழைக்கும்.

முக்கால்வாசி லாரி மற்றும் டெம்போகளில் உள்ள வசனம், “Sound  OK Horn”. ரொம்ப நாளா இதை சரியாக நான் படிக்கவில்லை. ஒரு நாள் திடீர் என்று தோன்றியது, “Sound Horn Okaaaaayyyyyy”, இது தான் சரியாக படிக்கும் முறை, அடுத்த தடவை இதை பார்க்கும் போது சொல்லி பாருங்க.

இன்று காலையில் ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த வாசகம்,

Lifte is short

Make a Sweet

      Feel My Love

வாழ்க்கை மிகச் சிறியது, அதை இனிப்பானதாக செய், இப்படித்தான் வர வேண்டும், ஆனால் Make a Sweet, இனிப்பைச் செய் என்று இருக்கு, தவறாக எழுதி இருக்கலாம், Make it sweet என்று வர வேண்டும். 

என் காதலை உணர், கடைசி வரி. ஆண்களை நோக்கி இதை எழுத ஆட்டோகாரர் கேயா ? இல்லை பின்னால் வரும் மகளிர்களை நோக்கியா இந்த வரிகள் ? எத்தனை பொம்பளைகளுக்கு அவர் காதலை சொல்வார் ?

சிறிது தூரம் போன் பின் தான் ரியலைஷைசன் வந்தது.

Make a sweet தான் சரி. அவருக்கு குஷ்பு,நமிதா மாதிரி கொழுக் மொழுக் பெண்கள் தான் பிடிக்கும் போல. அதனால் தான் இனிப்பைக் செய் என்று எழுதி இருக்கார். இனிப்பைச் செய்து விட்டு சும்மா இருப்பாங்களா, தின்னுவாங்க, நம்ம வாழ்கை ரொம்ப சின்னது, அதுக்குள்ள தின்ன முடிந்த எல்லாத்தையும் ஒரு கை பார்த்தா ? உடம்பு ஊத தான் செய்யும். அப்படி தின்னு கொழுக் ஆன பெண்களை பார்த்து தன் காதலை உணரச் சொல்ராப்ல.

அலுவலகம் வந்து விட்டதால் ஆராச்சியை தொடர முடியவில்லை !!!

Wednesday, November 5, 2008

சரோஜா தேவி சோப்பு டப்பா

சென்ற வாரம் நீண்ட நாள் பிறகு நண்பர் ஒருவனை சந்தித்தேன். குசல விசாரிப்புக்கு பிறகு, புதிதாக பிஸினஸ் செய்யப் போவதாக கூறினான். பிஸினஸ் ஆரம்பித்தால் என்னையும் சேர்த்துகோபா கூறியது தான் தாமதம், அடுத்த சனிக்கிழமை வா..உனக்கு டெல் சி இ ஒ அறிமுகப்படுத்தறேன், அப்படியே பிசினஸ் பற்றி உனக்கு தெரிந்துவிடும் என்றான். நம்பர் டு நம்பர் த்ரி பிஸினஸ் இல்லையேனு கேட்டால், டி டி ஸ் கழித்து தான் உனக்கு பேமண்ட் வரும், பார்ம் 16 குடுப்பாஙக என்றான்.

சனிக்கழமை , ஒரு கம்யுனிடி ஹாலில் முப்பது பேர் அமர்ந்து இருந்தார்கள். முக்கால்வாசி இல்லத்து அரசிகள். சிலர் குழந்தைகளோடு அஜர். நம்ம ராசி முதல் வரிசையில் அமர்த்தப்பட்டேன்.

ஒரு உயரமான ஆசாமி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், செல் போனை அனைத்து வைக்கும்படி வேண்டுகோள் (மிரட்டி) விடுத்தார். பின்னர் எந்த அறிவிப்பும் இல்லாமல் என்னைப் பார்த்து, உங்க வாழ்நாள் கனவு என்ன என்றார்….முதல் பென்ச் எனக்கு எப்பொவுமே சரிப்படாது, எனக்கு அப்படி எதுவும் இல்லை என்றேன். சரி நான் கூறுகிறேன் என்று அரம்பித்தார், ஒரு பங்களா, ஐந்து கோடி, கார் ஒரு கோடி, குழந்தைப் படிப்பு, இரண்டு கோடி..இப்படி கணக்கு போட்டு இறுபது கோடியின் நிப்பாட்டினார். ஆனால் மாச சம்பளத்தில் நம்மால் வாழ்நாள் சேமிப்பு முக்கி தக்கி ஒரு கோடி தான்  சேர்க்க முடியும். பக்கதுல இருந்த சிலிவ்லெஸ் ஆண்டி மண்டைய ஓவரா ஆட்டி கேட்டுக்கிட்டாங்க.

கடைசியில் மெட்டர் என்ன, நம்ம முப்பதாயிரம் கட்டி கம்பனியில் சேர வேண்டுமாம். இரண்டே பேர் நாம் மேலும் சேர்த்தால் போதும், அவர்களின் கீழ் உறுப்பினர் சேரச் சேர நமக்கு ”பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்….”

அவர் கம்பனி கம்பனி என்ற பொழுது, பிதாமகன் சுர்யா தான் நினைவுக்கு வந்தார். அயிரம் ருபாய் பொருளை வெறும் முன்னூறு  ருபாய்க்கு கேட்டதால், கம்பனிக்கு கட்டுப்படல…இருந்தாலும் உங்க மன தைரியத்த பாராட்டி, சரோஜா தேவி சோப்பு டப்பா, இனாம்….

கூட்டம் முடிந்து நண்பன் என்ன முடிவு என்றான், “நல்ல திட்டம், அப்போ நான் கிளம்பறேன், வீட்ல தேடுவாங்க” (என்னிக்கு தேடி இருக்காங்க, வேற போய் வரல….)சொல்லி விட்டு எஸ்கேப்.

 

 

 

 

 

 

Tuesday, November 4, 2008

அசோகமித்ரன் – ஊரின் மிக அழகான பெண்

இதற்கு முன்னால் அசோகமித்ரன் படித்ததில்லை. அழிவற்றவை தான் நான் படிக்கும் முதல் புத்தகம். ஆரம்பம் சில கர்ண பரம்பரை கதைகள், பின்னர் அவர் சிறுகதைகள்.
முதல் கதை, திருநீலகண்டர் - திருவோடைத் தேடி என்ற தலைப்பு பொறுத்தமாக இருக்கும். சிறு வயது முதல் திருவோடை தேடி அலைபவனுக்கு இறுதியில் ஆண்டியாக சென்ற ஒரு சொந்தக்காரர், தன் திருவோடை தபாலில் அனுப்புகிறார்.

என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவில்லை. நகுலனை தான் துனைக்கு அழைக்க வேண்டும். சாருவிடம் கேட்டால் திட்டு தான் விழும். ஒரே சமயத்தில் சாருவின் ஊரில் மிக அழகான பெண் - மொழிபெயர்ப்பு கதைகள், மற்றும் அழிவற்றவை படித்ததின் வினை.

சாருவின் மொழிபெயர்ப்புக் கதைகள் அனைத்துமே கிளாசிக். முக்கியமாக சாருவின் முன்னுரை மிகச் துல்லியமாக கதை களம் மற்றும் எழுத்தாளரின் மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.  ஒவ்வொரு கதையும் ஹான்டிங் ( Hauting ) வகை.ஒரு சிறுகதை இவ்வளவு தாக்கம் எற்படுத்துவது எனக்கு இது தான் முதல் முறை.

Saturday, October 25, 2008

கிணற்றுத் தவளை வரலாறு

வரலாறு, படிப்பது என்றுமே வேப்பங்காய். தேதிகள் நினைவில் இருக்க வேண்டும், வரைப்பட்ம் கச்சித்தமாக வரைய வேண்டும் இப்படி பல. மொத்ததில் பரீட்சையில் பாஸ் பண்ணும் அளவு தெரிந்தால் போதும் என்று தான் தோன்றும். நான் லினியர் முறையில்  நம் வரலாற்றுப்  பாடத்திட்டம் அமைக்கப்பட்டதே இதற்கு முக்கியமான காரணம்.

ஹராப்பா கலாச்சாரம் பற்றி படிக்கும் போது, அதே சமயத்தில் ஐரோப்பா எப்படி இருந்தது, சீனாவில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது. முக்கியமாக எதற்காகப் படிக்கிறோம் என்றும் தெரியாது. பாரதி சரித்திரம் தேர்ச்சி கொள் என்று கூறியது தேதிகளை மனப்பாடம் செய்ய அல்ல.

வரலாறு என்பது மனித வளர்ச்சியின் ஒரு பதிவு, உலகப்பரப்பில் வந்து சென்ற பலவிதமான மனிதர்களின் உழைப்பு, சிந்தனை இவைதான் இன்றைய உலகின் அஸ்திவாரம்.  அவர்களின் எண்ணவோட்டத்தை அறிய முற்படுவது தான் வரலாறின் முக்கிய வேலை. சம்பவங்கள் நடந்த தேதி, இடம் மட்டும் நினைவு வைத்துகொள்ள வரலாறு தேவை இல்லை. அந்த காலக்கட்த்தில் எந்த மன நிலையில் மனிதர்கள் அந்த சம்பத்தை நட்த்தினார்கள் என்பது மிக முக்கியம்.

அதே சமயம் அவர்களை சுற்றி இருந்த உலகம் எப்படிப்பட்டது, மற்ற தேச மக்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருந்தனர், இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் வரலாறு படிப்பது அஸ்திவாரம் இல்லாம் வீடு கட்டுவதற்கு சமம்.

Sunday, October 19, 2008

அமெரிக்கா

மேற்க்கில், முக்கியமாக அமெரிக்க கலாச்சாரத்தில் subtle என்ற வார்த்தைக்கு என்றுமே இடம் கிடையாது. மெளம் என்ற மொழி அங்கே வழக்கொழிந்து போய் விட்டது.

“Whatever An american says, take it with a pinch of Salt"

சிட்டிகை இல்ல, ஒரு மூட்டை உப்பு போட்டு தான் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். எதற்க்கு எடுத்தாலும் “Great, Fabulous, Wow" இது தான்.

“Wow Factor" என்ற வார்த்தையை உண்டாக்கிய பெருமை அவர்களைச் சேரும். அது இல்லாத எதுவுமே உருப்படாது. இந்த லட்சனத்தில், நம்ம பசங்களும் அவர்களை பின் பற்றினால்,

Literally பின் பற்றினால் என்ன அவஸ்த்தை பட நேருமோ அவை அனைத்து பட வேண்டும்.

நான் படித்த புத்தகங்கள்

புத்தகங்கள் வழி உலகத்தைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். ஒருவர் வாழ்நாளில் எவ்வளவு புத்தகம் படிக்க முடியும் ? எப்படி படித்தோம் என்பது தான் முக்கியமே தவிர எவ்வளவு என்பது

இல்லை, இந்த தர்க்கத்துக்குப் போகாமல் நேரடியாக ஒரு கணக்கு பார்க்க முடியுமா ?

www.goodreads.com, மற்ற நெட்வொர்க்கிங் தளத்தை விட சற்று மாறுப்பட்டது. நாம் என்ன படித்தோம், படிக்கின்றோம், படிக்க போகின்றோம், இவற்றின் பதிவே அதன் நோக்கம். நண்பர்கள்

கூட்டத்தை அழைக்கலாம், படித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் படித்த புத்தகங்களை வரிசைப் படித்தினால் ஐம்பத்தியாறு தேறியது. முப்பது வருஷத்தில் என்னால் முடிந்தது இவ்வளவு தான். தோராயமாக அறுபது வருடம் வாழ்ந்தால் மேலும் 50

புத்தகமே படிக்க முடியும். இந்த கணக்கில் சென்றால்.. வாழ்நாளில் நூறு புத்தகம் தான் படிக்க இயலுமா ?

fiction படிப்பது மிக எளிது, ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தை முடித்து விடலாம், Non-Fiction, philosophy travel, sattire, classic வகைகள் படிக்க பொறுமையும், ஆவலும் அவசியம் தேவை.

நண்பர் ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று non fiction படிப்பாராம். நானும் முனைந்த பொழுது, மூன்று ஐந்து ஆகிற்று, ஆனால் எந்த புத்தகமும் முடியும் போல தோன்றவில்லை. கதோபனிஷத் படிக்கும் பொழுது, மதுரை விமான நிலையத்தில் அமாங் த பிலிவர்ஸ் வாங்கினேன், படிக்க ஆரம்பித்தால் கிட்ட தட்ட முக்கால் வாசி முடிந்து விட்டது. திரும்பவும் கதோபனிஷத் விட்ட இடத்தில் தொடர முடியவில்லை !

ஒரு புத்தகம் படிக்கும் சமயம், ஒரு விதமான மெண்டல் கம்போஸர் செட் ஆகி விடுவதை தவிர்க்க இயலாது. அந்த மனநிலையில் தான் புத்தகம் மிக நெருக்கமாக நம்மிடம் பேசும்,

அந்நிலை தவறினால் தெரிந்த பாஷையும் அந்நியமாக தோன்றும். Every book chooses its reader, சும்மா ஜகன் மோகினி வசனம் கணக்காக இருந்தாலும் நம்பாமல் இருக்க

முடியவில்லை. சில எழுத்தை கேள்வி இல்லாமல் ஒத்துக்கொள்ள முடிகிறது, சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் காரித்துப்பத் தான் தோன்றுகிறது.

சாரு நிவேதிதா ஒரு கடிதம்

சாரு,

கடந்த ஆறு மாசமாக உஙகள் எழுத்தைப் படிக்க படிக்க ஒரு mixed feeling தான் தங்குகிறது, வெறுப்பு, பிரமிப்பு, exhaustion, இப்படி, சுருக்கமாக ஒரு rolla-coaster. ஒரு சமயம் ஹாரிசன் போர்டிடம் எப்படி உங்கள் படம் எப்படி சுப்பர் ஹிட் ஆகுது என்று கேட்ட பொழுது, “All my roles are, Ordinary Man doing extraordinary things" என்று கூறினார். உங்கள் எழுத்தும் அந்த வகையை சேர்ந்தது. “Extraordinary fantacies presented as everyday feelings/sensations. I wouldnt dare to use the term "words"". மிகச் சிலரால் தான் எழுத்தில் உணர்வை கொண்டு வரமுடியும். சில எழுத்துக்களை நாம் shere vocabulary க்காக படிக்கலாம், சிலதை கருத்துக்காக, சிலவற்றை சுவாரசியத்திற்க்காக.

குமுதம் கோணல் பக்கங்கள் ரொம்ப Built-Up என்று தோன்றியது, பார்க்
ஷெரடன் பார், பிடிக்காத கார் swift...இப்படி பல விஷயங்கள்.
கடந்த ஆறு மாசம் was a good enough Time, உங்கள் எழுத்தின் பல பரிமானங்களை அறிந்து கொள்வதற்க்கு. Zero Degree, வரம்பு மீறிய பிரதிகள், அரேபிய இலக்கியம், லாடின் எழுத்துகள், நாஸி அஜ்ரம், குட்டிக் கதைகள், கடவுளும் நானும், இப்படி every work was taking me on a rolla-coaster as I had mentioned before.

நான் படித்த புத்தகங்களில் charecterization துல்லியமாக செய்யக் கூடியவர் மூவர்.

fiction வகையில் Frederick Foresyth, Orham Pamuk (My Name is Red...ஒரு மாஸ்டர் பீஸ்....)
Non-Fiction வகையில் William Darymple. ஆனால் குட்டிக்கதை is an epitome of characterization. முன்னால் கூறிய பலருக்கும் ஒரு முழு புத்தகம் தேவைப்படும், ஆனால் ஒரு சில பாராக்களில் அதை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியும்னு நினைக்கல !!! Simply Amazing.....

Tuesday, October 14, 2008

ரஜினிகாந்த் கட்சி

ஐயா பெரியவரே, நீங்க ஐஸ்வர்யா ராய் பச்சன் பொண்ணு கூட டூயட் பாடுங்க, ஆன்மீக அராய்ச்சி புரிங்க.....ஆனால் பாவம் உங்க ரசிகர்களை இப்படி போட்டு குழாப்பதிங்க....

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2017&cls=row3
"அரசியலுக்கு நான் வந்து தான் ஆகா வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது."

இதோட நிப்பாட்டி இருக்கலாம். உங்க ரசிகர்களும் தெளிவு ஆகி அவங்க வேலையை பார்க்க போவாங்க....ஆனால் உங்களுக்கு யந்திரன் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் ....அதனால்
"நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது" என்று ஒரு பிட் போட்டாச்சு.

மாயாவதி தலைமையில் உங்க வீட்டு வாசலில் நின்று கொண்டு நீங்க வர கூடாதுன்னு ஆர்பாட்டம் நடக்குதா ?

சினிமால தான் நான் அப்படி இப்படி என்று டயலாக் விடறிங்க ....கேட்டா நான் சொல்லல இயக்குனர் சொன்ன மாதிரி பேசினேன் அப்படின்னு விளக்கம்...... (நன்றி குசேலன் படம்). இப்போ இப்படி பேச K.S.ரவிக்குமார் சொல்லி குடுத்தாரா ?

வாழ்க்கை வேற சினிமா வேற சார் ....அத நீங்க முதல்ல நல்ல புரிஞ்சு நடங்க....

Sunday, October 12, 2008

குஷ்பு குளம் மற்றும் ராசப்பர்

குற்றால குற வஞ்சியின் சில வரிகளை, குறிப்பாக சிங்கா சிங்கி உரையாடலை இன்று படிக்க நேர்ந்தது. திரிகூட ராசப்ப கவிராயர் அருமையான தமிழில் எதுகையும் மோனையும் கலந்து சில adult matter தூவி இருந்தார். ஆனால் முழுசா படித்தால் இளவட்ட conversation ஆக தான் தோன்றியது. தவறாக தோன்றவில்லை. நம்ம கலாச்சார காவலர்கள் இன்னும் படிக்கவில்லை பொலும். ராசப்பர் தப்பித்தார் !!!

ஒரு சிலருக்கு ஒழுங்கு கிறுக்கு பிடித்து ஆட்டி கொண்டு இருக்கும். எதிலுமே தவறு தான் தோன்றும், அவர் எங்கு நோக்கிலும் ஒழுங்கினமே தென்படும். நல்லது தெரிவதற்கு வாய்பே கிடையாது. இவ்வகை மக்கள், தினமும் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொருள்களை அரை மணி நேரம் பார்த்து தியானம் போல் செய்து வந்தால் குணம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

பிரான்ஸ் நாட்டு (Wine) குடிமகன் ஒருவர் உலகப்பயணம் மேற்கொண்டார். சாதரணமாக இல்லை, Around the World without reservation, lift வாங்கியே உலகை சுற்றி இருக்கிறார். அசாத்திய தைரியம். அதுவும் இந்த நூற்றாண்டில், fellow மனிதனை மட்டும் நம்பி இவ்வளவு பெரிய risk !!!!!!

தமிழ்நாட்டு மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் கிடையவே கிடையாது. பாரதியார் பாடியதை தப்பாக புரிந்து கொண்டு , சரித்திரம் இகழ், ஜோதிடம் புகழ் என்று திரிந்து கொண்டு இருக்கிறார்கள், சான்று மதுரை மங்கம்மாள் சத்திரம், திருமலை நாயக்கர் மகால் இப்படி பல. ஜெமோ வலையில் குஷ்பு குளம் பற்றி படிக்கும் போது சிரிப்பதா அழுவதான்னு தெரியல. பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா ஆடிய பின்னர் தான் எங்க ஊரு பசங்களுக்கு ஒன்னுக்கு போகும் சுவர் மகால் சுவர்னு தெரியும் !!!

Wednesday, September 3, 2008

Time Pass -1

நல்ல பத்தி எழுத்தாளர் ஆக வேண்டும் என்றால் நாட்டு நடப்புகளை நன்றாக கவனிக்க வேண்டும் என்று தான் இத்தனை நாட்களாக நான் நினைத்து வந்தது. ஆனால் தன்னை சுற்றி நடப்பதை மட்டும் கூர்ந்து நோக்கினால் போதும் போல !!!. சில பல எழுத்தாளர் வலைப்பூவை படித்த பின்னர் வந்த முடிவு இது.

"Writers are Exibitionist". "எழுதுவது படிப்பதற்கு தான் இல்லை தன்னை பற்றி பறை சாற்றுவதற்கு தான்" என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடத்தலாம். மன்னர் காலத்து புலவர் Mentality இன்னும் போகவில்லை என்று தான் தெரிகிறது. போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு வரும் கடிதங்களை மற்றும் அவர் தம் பதில்களையும் இணையத்தில் வெளியிடுகிறார்கள். முக்கால்வாசி கடிதம் சப்பை !!!

சுஜாதாவிடம் ஒருவர் தன்னை எழுத்தாளர் என்று அறிமுக படுத்தி
கொண்டார்."Writing சரி , Survival கு என்ன பண்றேள் ?" இது தான் சுஜாதா பதில்.
Orhan Pamuk's My Name is Read புத்தகத்தில் ,"நல்ல முடிவாக தான் எடுத்து இருக்கிறான், வரை கலையை தொழிலாக கொள்ளாமல் பொழுதுபோக்காக கொண்டதால் தான் இன்றும் அக்கலையில் ஈடுபாட்டோடு இருக்க முடிகிறது." என்று வரை கலை ஆசான் ஒரு கதாபாத்திரத்தை நோக்கி கூறுவார். தமிழில் புல் டைம் எழுத்தாளர் அனைவரும் அந்த ஆசானின் அறிவுரையை பின் தொடர்ந்தால் ,நல்ல படைப்புக்களை படைக்க வாய்ப்பு உள்ளது இன்று பட்சி கூறியதாக பருந்து சொன்னது.

Tuesday, August 5, 2008

பழைய சோறு

"பழைய சோறு உண்டு வாழ்ந்தாரே வாழ்ந்தார்
மற்றவர் எல்லாம் வயத்தால போய் ஓய்ந்தார்"

பழைய சோறு தின்ற மயக்கத்துல வள்ளுவர் இந்த குறள எழுத மறந்து இருப்பார். தமிழ்நாட்டு தேசிய டிபன், லஞ்ச், டின்னர் இதுதான். சும்மா காலையில் தயிர் இல்ல மோர் விட்டு, ஊருகா, மாவடு போட்டு அடிச்சா அன்னிக்கு நாள் முழுக்க நிறைவா இருக்கும். ஒரு விதமான மயக்கத்தோடு திரியலாம்.

வாரம் முழுக்க விதம் விதமாக டிபன் பழைய சோறு மூலம் தயாரிக்கலாம். சாதா பழைய சோறு - சும்மா மோர் உப்பு போட்டு, ஸ்பெஷல் - மோர், உப்பு, கடுகு தாளித்து, வெங்காய ஸ்பெஷல் - மோர், உப்பு, கடுகு கூட வெங்காயம் தாளித்து, ராயல் ஸ்பெஷல் - வெங்காய ஸ்பெஷல்லில் மோருக்கு பதில் கெட்டி தயிர். வெஜிடேரியன் எக்ஸ்ட்ரா வெகன்சா - கெட்டி தயிர், உப்பு (கல் உப்பு இருந்தா சூப்பர்),வெங்காயம், தக்காளி,கடுகு தாளித்து, காரட் துருவி போட்டு தக்காளிய வட்டமா நறுக்கி போட்டு அலாங்கரிச்சு, கொஞ்சம் கொத்தமல்லி போட வேண்டும். வாரத்தில் அஞ்சு நாளைக்கு சரியா போச்சா.......

எனக்கு தெரிஞ்ச நாடார் ஒருத்தர், பழைய சோறில் நல்லெண்ணை விட்டு, இரண்டு நாட்டு வழைப்பழம் போட்டு பிசைந்து சாப்பிடுவார்.

Friday, August 1, 2008

குசேலன் - பி வாசுவிடம் சில கேள்விகள்.....

கன்னடத்துல எடுத்து பயிற்சி செய்யாமல் ஏன் தமிழ்ல குசேலன் எடுக்கப்பட்டது ?

உங்களுக்கு ஏன் சார் இந்த கொலை வெறி ? இது தான் தீவிரவாத இயக்கமா (Terrorist Direction ) ?

நீங்க எந்த நூற்றாண்ட சேர்ந்தவர் ??? தமிழ் சினிமா முன்னேறக்கூடாதுனு உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ?

நாலு கதாப்பாத்திரத்தை வைத்து எடுக்க வேண்டிய படத்தை நானூறு பேர் வைத்து எடுத்து ஏன் ? வையாபுரி, கிருஷ்ணன்,பாஸ்கர்,மயில்சாமி,லிவிங்க்ஸ்டன், சந்தான பாரதி,சந்தானம்,மதன் பாப்,விஜயகுமார்,மனோபாலா இப்படி அல்லகைக்கு எல்லாம் வாய்ப்பு குடுத்த நீங்க வெண்ணிற ஆடை முர்த்தி மேல மட்டும் ஏன் ஓர வஞ்சனை ? ஒரு குருக்கள் வேடம் குடுத்தா தான் என்ன ? "ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர் , டே...ப்ரஹ்மஹத்தி ஓரமா போட ...." அவர் ஸ்டைல்ல பேசிகிட்டு இருப்பார்..... அதை மாதிரி தான் வாலிக்கும் ஒரு வேஷம் !!!! எப்படியோ கும்பல வெச்சு கோவிந்தா போடறதுன்னு முடிவு ஆச்சு ....எல்லாரையும் மொத்தமா கூப்பிடு இருக்கலாம் ........

தலைவர் introduction scene கூட காபி அடிக்கணுமா ? நட்டு உதவி இயக்குனர் தான் உங்கள சுத்தி இருக்காங்க போல !!! Mask of the Zorrow, House of Flying Dagers, இப்படி தமிழ் நாட்டுல சக்கை போடு போட்ட படத்தில் இருந்தா உல்டா அடிக்கனும் ? கொரியன் படம் பார்க்க சொல்லுங்க .. இப்ப எல்லாம் விஜய் டிவில தமிழ் டப்பிங் போடறாங்க......

கேள்விகள் தொடரும்........

குசேலன் படமும் சில விண்ணப்பங்களும்......

கேரளா முதலமைச்சருக்கு ஒரு விண்ணப்பம் !!! தயவு கூர்ந்து கேரளா சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அழைத்து சோட்டாநிகர கோவில்ல வெச்சு "இனி நாங்க யாரும் பி.வாசுவுக்கு பட உரிமை விக்க மாட்டோம்னு!!!" சத்தியம் வாங்கிட்டார்னா... தமிழ் நாட்டு ஜனங்க நாங்க எல்லாரும் அவரும் அவர் வாரிசுகளும் தான் நிரந்தர கேரளா முதலமைச்சர்களாக இருக்கணும்னு எங்க ஊரு மாரியம்மனுக்கு மண் சோறு சாப்பிடுவோம்னு உறுதி குடுக்கறோம்.....

பி வாசு, நீங்க Rapist சந்தான பாரதிய முத்துக்காளைக்கு போட்டியா கொண்டுவந்துட்டிங்க....இனிமே அவர் தான் எல்லா காமெடியனுக்கும் எடுபொடி.... அதனால அவரோடு பதவிய நீங்க எடுத்துக்கலாம்....வில்லனா நடிச்ச அனுபவம் உங்களுக்கு நிறைய உண்டு.....

அக்கா சௌந்தர்யா, ஒரு விண்ணப்பம், சாலமன் பாப்பையாவின் உதவியாளர் வள்ளுவர் சொன்ன மாதிரி "கற்க கசடற கற்க", நீங்க அனிமேஷன் புலி தான்...கசடறக் கத்துக்கிட்டாச்சு...."நிற்க அதற்கு தக" அதுல தான் சறுக்குது...பின்தங்கிய கிராமத்து நதில டால்பின் காட்டி தான் உங்க திறமை எங்களுக்கு தெரியனும்னு அவசியம் இல்ல.....கிருபானந்த வாரியார்... சாரி சுல்தான் வாரியார் படத்துல நாங்க பார்த்துக்குறோம்... இனி அட்ட படத்துக்கெல்லாம் கிராபிக்ஸ் போடாதிங்க்கா ....அப்பறம் முகவை குமார் (சாரி நடிப்பு சுறாவளி ரித்திஷ்) படத்துக்கு எல்லாம் கூப்பிடுவாங்க..நீங்க ஹாலிவுட் போக வேண்டியவங்க......

பசுபதி சார், கமல் எப்பவுமே அவர் புது படம் பற்றி சொல்லும் போது, "இந்த படத்துல என்னோட கதாப்பாத்திரத்தை விட கூட நடிப்பவர் ரோல் தான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது....எனக்கே அந்த ரோல் பண்ண வேண்டும் போல இருந்தது" இப்படி பிட்ட போடுவார். படம் பார்த்தா.....கூட நடிச்சவர் நாலு ரில் கமல் கிட்ட நின்று விட்டு காணாமல் போய்விடுவார். இப்படி தன் படத்தில் அர்ஜுன், பிரபு, நேப்போலியன், போல பலருக்கு ஆப்பு வெச்சு இருக்கார். நீங்க மட்டும் தான் விதி விலக்கு !!! விருமாண்டி, "மரண கிணறு மனிஷா கொய்ராலா" படம், இரண்டுமே உங்களோட நடிப்புக்குச் சான்று, "ஒரு பானை சோறுக்கு இரு சோறு பதம்"....
குசேலன்ல நம்ம ரோல் காமெடியா, கதாநாயகனா, கேரக்டர் ரோலா இப்படி குழப்பத்தில் திரிஞ்ச மாதிரி தோனுது.... . இனிமே விஷப்பரிட்சை எல்லாம் வேண்டாம் சார், உங்க நடிப்புக்கு சரியான தீனி போட படம் வரும் வரை
நீங்க பட்டாசு பாலு ரோல் பண்ணுங்க சார், நாங்க பார்க்கறோம்.

படத்தில் மிக நன்றாக நடித்திருப்பது(!!!) மனோபாலா, ர சுந்தரராஜன்,லிவிங்க்ஸ்டன்,கிருஷ்ணன்,மயில்சாமி. இதுக்கு மேல அவங்க கிட்ட எதிர் பார்க்க முடியாது. keep up the good work...உங்கள் சேவை தமிழ் சினிமாவுக்கு தேவை......(இதுல பாதி பேர் முன்னால் இயக்குனர்கள்......தமிழ் சினிமாவுக்கு ஆயுசு கெட்டி !!!! இவங்க இயக்கி கொலை செஞ்சது போதாதுனு இப்போ நடிப்பு வேற...)

தலைவா !!! ஆறில் இருந்து அறுபது வரை magic உங்களுக்கு re-create பண்ண இளம் தமிழ் இயக்குனர் நிறைய இருக்காங்க. நீங்க ஓல்ட் wine..எந்த இயக்குனர் இயக்கினாலும் படம் சில்வர் ஜூப்ளி....உங்க குரு பாலசந்தர் வெச்சு தில்லு முள்ளு part II எடுக்கலாம், இந்திரன் சந்திரன் ஆக நீங்க வந்தா திரை அரங்கே திம்மிலோல் படும். அமீர் கிட்ட சொன்னா பரட்டை வெச்சு அரட்டிற மாட்டாரா !!! வசந்த பாலன், பாலாஜி சக்தி வேல், இப்படி தவமாய் தவம் இருந்து உங்கள வெச்சு பின்னிடுவாங்க. அப்பறம் எதுக்கு சார் இந்த கருமாந்திரம் எல்லாம், பெங்களூர்ல ஒரு சில இடத்தில், கர்நாடக ரக்ஷன வேதிகே பசங்கள சமாளிக்க, குசேலன் படம் மதியமே போட்டு காட்டினார்கள் !!!! இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு நாம நேரத்தை வீணாக்க வேண்டாம்னு திரும்பி போய்டாங்க. சந்திரமுகில வடிவேல் "வேணாம்னே இவன் நம்ம வீட்டுக்கு வேண்டாம்" சொல்லுவார், அது மாதிரி தலைவா "நமக்கு பி வாசு வேண்டாம்....."

Wednesday, July 30, 2008

India: A Wounded Civilization


A first hand read of Naipul doesnt normally throws the kind of insight it is intended to, rather the first book read, may go unnoticed, but the subsequent books builds upon one, in a manner, that it becomes very hard indeed to disagree with him on his interpretations.As we read para after para, one is forced not to negate any of his thoughts, the mind is standstill and accepts all the ideology which he poses. But a later contemplation arises where we try to discard, argue or negate Naipul's theory. The same goes with among the belivers, which happened to be my first book, but now after reading India : A wounded civilization, i am forced to wonder, why does he builts a complex plot around every thought of his to compell the reader to belive the same !!! The history of Vijayanagar, RK Naryanan's novel to name a few are the plots to inject the idea of intellectual depletion in India for centuries, may sound authentic in the first place, but dilutes with time.


A novel is a social introspection, a naipul definition, is only 100 years old in India, brought by the Raj and Bengal was the first to quickly adopt and excel in the same. What do we then term the old literatures available with us for centuries !!. Is 'nt our epics a grandeur version of Novels, may be we had the much more matured version of novels centuries back, that the intellectual community never felt the reason for growing novel kind of literature. Prose, Poetry and Drama takes center stage in the Indian form of literature. A novel is an extension of the prose version, which was very common right from the golden olden days of Indian civilization. Why do we use mathematics symbol language in Science ? For a better way of representation. The summation sign in calculus gives a message equal to 100 words for a science student, if every time a summation is used, if the symbol has to be replaced with the equivalent words, even simple science theorms would run for thousand pages. May be that is the reason why the Indian intellectuals moved more towards poetry and drama, to convey subtle yet strong messages about their times and lives.

Isolation and comtemplation are the religious answer to worldly failures ? What is wrong if Religion has an answer ? What is wrong if souls defeated by the unruly world get some solace ?The hippies of the eighties and the techies of this millennium, what is common between them ? Running for goals and be frustrated after a marathon. Its not only those who fail turn over to religion, even successfull business men want to retire to religious solace. Why do we see a lot of retirement solutions aimed at people in mid thirties these days by the banks and insurance companies ? Have they failed miserably in their share of run for money and fame ? No they have had enough of money,fame and success, a spoon of honey tastes very good ,but after one has a bottle, he would never want any more honey in his life time. That is the same with wordly success and failures.

Wednesday, May 14, 2008

ரோபோ - 1

மார்கெட்டில் இரண்டு வாரமாக ரோபோ பொம்மைக்கு ஏக கிராக்கி.

"அப்பா ஸ்கூல்ல எல்லாரும் வாங்கிடாங்க பா, நாமளும் ஒன்னு வாங்கலாம், ரெய்ம்ஸ் எல்லாம் சொல்லுமாம் பா....சிகப்பு லயிட்டோட நடக்குமாம், இன்னிக்கு வாங்கிதாப்பா ?"

"அவன் எதுமே கேட்டதில்லை, முன்னுறு ருபாய் தானாம், கனகா அக்கா வீட்ல நெத்து வாங்கி இருக்காங்க, இன்னிக்கு வரும் போது வாங்கிட்டு வாருங்களேன் !!!"

நான் தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ஒரு சிறு நகரத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில் உதவி இன்ஜினியர், குவாடர்ஸ் வீடு, மனைவி, ஒரு மகன் சந்திரன், வயது ஐந்து, குவாடர்ஸ் அருகில் இருக்கும் கேந்திரிய வித்யாலயாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான், படு சுட்டி. அளவான சம்பளம், நிம்மதியான வாழ்கை, இந்த சந்தர்ப்பதில் தான், ரோபோ பொம்மை எங்கள் வீட்டுக்கு வந்தது. இரண்டு டிரிப்ள் எ பாட்டிரி போட்டால் இயங்கும். ஆங்கிலத்தில் ரெய்ம்ஸ் நடந்து கொண்டே சொல்லும். சந்திரனுக்கு ரொம்ப படித்து போனது, வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அந்த ரோபோவுடன், தான்.

அன்று இரவு, எதோ நெருடுவது போல் உள்ளதே என்று விள்க்கை போட்டால் பக்கதில் அந்த ரோபோ பொம்மை, அதன் தலையில் உள்ள சிகப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, சந்திரனுக்கு என் அருகை தான் படுக்க வேண்டும், பொம்மை அவன் அருகில் இருந்தது, "தூங்கும் போதும் பொம்மையா !!! " பொம்மை அனைத்து விட்டு படுத்தேன்.

மறு நாள், சந்திரனிடம், "ஏண்டா தூங்கும் போது பொம்மையோடு தான் தூங்குவியா ?"

"இல்லப்பா, பொம்மைய அலமாரியில் வைத்து விட்டு தான் தாங்கினேன்..."

"என்னடா ...நைட் அது உன் பக்கத்தில் ஆன் அகி கிடந்த்தது லைட் எல்லாம் எரிந்து"

"என்னப்பா சொல்ற இரண்டு நாளா அதுக்கு பேட்ரி வேண்டும்னு அம்மாகிட்ட கேட்டா , வாங்கி தர மாட்டேன் றா ?"



தொடரும்

Friday, May 9, 2008

சினிமா மினிமா




சினிமா என்ற் ஊடகத்தின் அதி முக்கியமான வேலை மக்களுக்கு பொழுது போக்குச் சாதனமாகச் செயல்படுவது தான். அந்த வேலையை மிகை இல்லாமல் செய்ய வேண்டும், சில படிப்பினையை ஊட்டலாம், சிரித்து மகிழ அனைவர் மனதும் புண்படாதவாறு காட்சிகளை காட்டலாம், கவிதை, இசை ஆகிய கலைகளின் நுட்பத்தினை மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம். இதனால் சினிமாவும் மேண்படும், அதை பார்க்கும் சமுதாயமும் மேண்படும். நல்ல கருத்துக்களை பொழுது போக்கு அம்சத்தோடு மக்களுக்கு அளிக்கும் சினிமாவே மிக உன்னதமான சினிமா.
மனித மனத்தின் வக்கிர பகுதிகளை பதிவு செய்வது, மிகைபடுத்த பட்ட மனிதர்களை காண்பித்து உசுப்பேத்தி விடுவது, செயற்கை செய்கைகளை பிராமதப்படுத்தி காண்பிப்பது, இத்தகைய செயல்களே இன்றைய சினிமாவின் தலையான வேலையாக உள்ளது.
கலைஞர் டிவி யில் தமிழ் புத்தாண்டு அன்று சாயம் நாலு மணி முதல் இரவு 8 மணி வரை பருத்தி வீரன் என்ற படம் ஓளிபரப்பபட்டது. பல விருதுகளை குவித்த படம், வெளிநாடுகளில் பாராட்டப் பட்ட படம். வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி படம். ஆனால் எதை பதிவு செய்தது ?தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராம நிகழ்வுகளையா ?, அங்கே இருக்கும் மனிதர்களின் வாழ்வையா ?
இயக்குனரின் நோக்கம் என்ன ?
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதி வெறியோடு பெண் மண் போதை இவையே வாழ்க்கை என்று அலைபவன் ஒருவனின் காதல் கதையை பலவித பொழுது போக்கு அம்சத்தோடு (? முக்கியமான பொழுதுபோக்கு, திருநங்கைகளை வைத்து ஒரு கேலி கூத்து.) கூறி இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தோடு முடித்து, படித்த மக்களின் மத்தியில் இப்படியும் ஜனங்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று காட்டி நல்ல பெயர் எடுப்பது.
நல்ல லாபம் சம்பாரிப்பது, மிகச்சிலரே இப்படி படம் எடுப்பர் ஆகையால் அனைத்து விருது வழங்கும் விழாக்களுக்கு அனுப்பி வைத்து, கிடைக்கும் விருதுகளை வாங்கி, அங்கே மெடையில் ஒரு அறிவு ஜீவித்தனமான உரை அற்றுவது.
இத்தனையும் முடித்து அவர் அடுத்த படத்திற்க்கு போய் விடுவார், அவரை பாராட்டிய படித்த கூட்டமும் தங்களின் மற்ற வேலைகளை கவனிக்க போய் விடுவார், இறுதியில் பாதிக்கப்படுவது யார் ? தமிழ் நாட்டின் அடித்தட்டு மக்கள். அவர்கள் தான் நமது ஜனத்தொகையில் முக்கால்வாசி சதவீதம். தனது ஆதர்ச கதாநாயகன் என்ன செய்தாலும் அவர்களுக்கு வேதம். இதற்கு சான்று தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர் மன்றங்கள். மக்கள் திலகம் எம்ஜி யார் தொட்ங்கி இன்று வந்த பரத் வரை தமிழ் நாட்டில் ரசிகர் மன்றம் உண்டு. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு மூன்று முதலமைச்சர்கள் சினிமா துறையிலிருந்து. வேறு என்ன அத்தாட்சி வேண்டும் ?
நம் மக்களுக்கு திரைபடத்தையும், நிஜ வாழ்கையும் பிரித்து பார்க்கும் பக்கும் கிடையாது. பகுத்தறிவு பகலவர்கள் பிறந்த இந்நாட்டில் முக்கால்வாசி ஜனங்களுக்கு எழுத்தறிவு கிடையாது. இப்படி உழலும் நம் மக்களுக்கு பருத்தி வீரன் போன்ற ஒரு படம் தேவையா ?இவர்களால் அந்த படத்தில் வரும் கதாநாயகனின் செயல்களை கொண்டாட தான் முடியுமே தவிர அதில் இருந்து படிப்பினை பெறவோ, இல்லை ஒரு கலையாக ரசிக்கவோ முடியாது. இந்த மாதிரி படங்களால் செல்லரித்து போன நமது சமுதாயம் மேலும் அழுகி போகுமே தவிர திருந்தாது, முன்னேறாது. இயக்குனர், நடிகர், நடிகை முன்னேறிவிடுவார்.

Thursday, May 8, 2008

பெங்காலி நண்பர் -2


மீண்டும் அதே அலுவலக பான்ட்ரி, சாயம் மணி நாலு, காலையில் சிற்றுண்டி அறுந்தி கை கழுவும் போது அப்புமா (தந்தை வழி பாட்டி) சொன்னார்
 
"டே !!! குதிகால அலம்ப்பு. இல்லை சனிஸ்வரன் பிடிச்சுகுவான்........."
 
 "ஆமாம் கூகுள் மேப்ல என்ன பார்த்துகிட்டே இருக்கார்...பிடிக்கறத்துக்கு.....சாக்ஸ கழட்டி அலம்பிண்டு இருக்க நேரம் இல்ல...நான் போய்ட்டு வரேன்...பய் "
 
நாலு மணி வரைக்கும் நாள் ஒழுங்கா தான் போச்சு, காபி சாப்பிட போனால் வங்காள வரிகுடா பான்ட்ரியில் மையம் கொண்டு இருந்தது, அவசரத்தில் பார்க்கவில்லை.
காபி எடுத்து வெளியேறும் போது தான் சுனாமி தாக்கியது....
 
"வந்தே மாதரம் தெரியுமா ?  யார் எழுதியது ??...."
 
"!!! பக்கீம் சந்திர சேட்டர்ஜி..... !!!." இப்ப அதுக்கு என்ன வந்துச்சு ??? பெரிசா எதுக்காவது அடி போடறாப்லயா ?? ஒன்னும் புரியலை ... மடையா பெங்காலி நண்பர் நினைப்பது எல்லாம் புரிந்து விட்டால் , நீ எங்கயோ போய் இருப்ப ...இங்க குப்பை கொட்டிக்கிட்டு இருக்க மாட்ட....
 
ஒரு அற்பத்தை பார்ப்ப்து போல் என்னை பார்த்து ....." அந்த பாட்டுக்கு டியுன் போட்டது யார்னு தெரியுமா ?"
 
கத்தாளை பாட்டுக்கு இசையமைத்து யாருனு சன் மியுசிக்ல் கேட்டாங்க, தெரிந்து இருந்தால் குலுக்கல் முறை தேர்வுப் போட்டிக்கு நேயர் தபால் கார்டு போட்டு இருக்கலாம்.......இதுல வந்தே மாதரத்துகா......ஆத்தா மகமாயி.... நீ தான் நாக்குல வந்து எழுதனும்....
 
"தெரியாது ...நீ தான் சொல்லு ?? " அங்க தான் சனீஸ்வர பகவான் கச்சேரிய ஆரம்பிக்கிறார்.....
 
 
பக்கீம் சந்திர சேட்டர்ஜி அவர் தாத்தாவுக்கு பக்கத்து வீடு போல..... எந்த சுழ்நிலையில் வந்தே மாதரம் எழுத பட்டது.... ரபீந்தரநாத் டாகுர் அதுக்கு பல கருவிகள் கொண்டு  இசையமைச்சது...அரபிந்தர் பரோடாவில் அதுக்கு வேதாந்த விளக்கம் அளித்து என்று ஒரு பிரசங்க சூறாவளி நட்த்தி முடித்து விட்டார்.
 
மணி  அறு பத்து.... நாலரை மணிக்கு மாட்டினவன், அதுவும் தனியாக.. வீட்டுக்கு போய் குதிகால டெட்டால் விட்டு கழுவ வேண்டும்

Wednesday, May 7, 2008

கடலுக்கு அப்பால் -ப.சிங்காரம்


சமீபத்தில் தான் ப.சிங்காரம் பற்றி கேள்விப்பட்டேன். அவர் தம் வாழ்ந்நாளில் எழுதிய இரண்டு நாவல்கள், "புயலிலே ஒரு தொணி" மற்றும் "கடலுக்கு அப்பால்".

கடலுக்கு அப்பால் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூறலாம். சுதந்திர போராட்ட பதிவுகள் பல இருந்தாலும், நேதாஜியின் ஐ.ன்.ஏ இயக்கதில் இருந்த தமிழர்களை எந்த ஒரு எழுத்தாளரும் தத்ருபமாக் இந்த அளவு பதிவு செய்ததில்லை. அந்நாளில் மலயாவில் வாணிகம் செய்தவர், கூலி வேலை பார்தவர், பல வருடங்களாக அங்கே குடியேறியவர் இப்படி ஒரு சரித்திர பதிவ இன்றளவு தமிழில் வந்தது இல்லை,இனி வருமா என்பதும் சந்தேகமே. 1950ல் எழுதி 12 வருடங்கள் பதிப்பாளர் கிடைக்காமல், 1963ல் புத்தகமாக் வெளிவந்தது. இதே கதி தான் அடுத்த நாவலுக்கும். இதனால் தான் என்னவோ அவர் தம் வாழ் நாளிலே மேலும் எதுவுமே எழுதவில்லை போலும்.

செல்லையா கதையின் நாயகன், கிராமத்தில் அதிம் படித்த சுட்டிகையான பையன், வானா இனா செட்டியார் செல்லையாவின் அப்பாவின் பால் கொண்ட நட்பின் காரணமாக அவனை மலயா அழைத்து சென்று தன் கடையில் வைத்து கொண்டு வேலையும் பழகி கொடுக்கிறார். ஜப்பானியரின் குண்டு வீச்சில் மகனை பறி குடுத்த பின்னர், செல்லையாவை தன் மகன் போல் வளர்கிறார், மகள் மரகத்தை அவனுக்கு கட்டி குடுக்க நினைத்து கொண்டு இருக்கும் தருணத்தில், ஐ.ன்.ஏ ஆர்மியில் போய் செல்லையா சேர்ந்து விடுகிறான். ராணுவம் அவனை வீரம் மிகுந்த ஆண்மகனாக மாற்றி விடுகிறது, ஆனால் அதுவே அவனுக்கு மரகதத்தை மணக்க தடையாகி விடுகிறது, வட்டி தொழிலுக்கு அவன் லாயக்கு இல்லை என்று செட்டியாரை முடிவு எடுக்க தூண்டுகிறது. செல்லையாவால் மரகத்தை மறக்க முடியவில்லை. செல்லையா மரகதம் சேர்ந்தார்களா ? செட்டியார் மனது மாறியதா ? இது தான் கதை.

கதையின் களம் மிகப் புதிது, 1941 மலயா, நேதாஜி இறந்த நேரம், ஜப்பானியரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி போரில் தோற்கடித்து விட்டது, இங்கிலாந்து படைகள் வெற்றி வாகை சூடி மலயாவில் இறங்க ஆரம்பிக்க போகிறது, ஐ.ன்.ஏ முழுவதுமாக கலைந்து வீரர்கள் பொழப்பை தேடி பல ஊர்களுக்கு சிதறி சென்று விட்டனர். இந்நிலையில் செல்லையாவும் பழைய வேலை, காதலை தேடி செட்டியார் கடைக்கு வருகிறான்.

கதையின் அனைத்து கதாப்பாதிரமும் உயிருடன் நம் முன் உலவுவது போல் அவ்வளவு தத்ருபமாக சித்தரிக்கப் பட்டுள்ளது. செல்லையாவின் நண்பன் மாணிக்கம், வேலையாம் கருப்பையா, மலயா இன்ஸ்பக்டர் இப்படி சொல்லி கொண்டே போகலாம். கதையின் ஊடே மெல்லிய நகைச்சுவை பரவலாக காண கிடைப்பது கதையின் ஓட்டத்துக்கு பெரிய பலம். முக்கியமாக மாணிக்கம் செல்லையா சம்பாஷனைகள்.

"அறுவது சினம் சீறுவது பிழை, உணர்க"

"உணர்ந்தனம்"

"கண்ணகி போன்றவர் பெண் தெய்வங்கள், கும்பிடலாம் பெண்டாள முடியாது....அதனால் தான் கோவலன் மாதவியை தேடி சென்றான்....."

"எப்போழுது கண்ணகியை திரும்பி தேடி வந்தானோ, உடனே கொல்லப் பட்டான்...."

"மரகதம் போன்றோர் கண்ணகி போன்றோர், ஆகவே அவளை மற்ந்து விடு"

மலயா இன்ஸ்பக்டர் ..."எனக்கு டாமில் சரியா வராதுனு கெலி பன்ன ப்டாது........... லிக்கர் ஒன்லி ஆப்டர் சன் செட்... இப்போ இந்த சனியன் கொப்பிய கொடு"

கதையின் இன்னொரு பலம் வட்டார வழக்கு, செட்டியார் அடிக்கடி கூறும் "வேல் மயிலம் !!! முருகா" , மரகதம் பேசும் முறை "செய்வீகளா, மாறமாட்டீகளே...." ஆன்டி பாஸிஸ்ட்டு காப்டன் கிம் லீ பேசும ஆங்கிலம் கலந்த மலயா தமிழ்

தமிழ் வாசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்

http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%AA+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

என்றுமே நல்ல தரமான் எழுத்தை அதன் சிருக்ஷ்டிகர்தா மறைந்த பின் தான் இந்த சமுதாயம் அங்கீகரிக்கும் போல.

Tuesday, May 6, 2008

பெங்காலி நண்பர் - I

அலுவலகத்தில் எனது பெங்காலி நண்பர் ஒரு சுவாரசியமான பேர்வழி. எந்த ஒரு விஷயத்தையும் மதிப்பீடு செய்ய தயங்கவே மாட்டார் (அது பெங்காலியரின் பிறவி குணம் என்று
கேள்வி பட்டது உண்டு.) ஐ.பி.ல், ஹுன்டாய் ஐ10, கர்நாடக அரசியல், சிவசெனா அமிதாப் மீது அவதூறு,ரஜினியின் சுப்பர் ஸ்டார் அந்தஸ்து, அராசாங்க ஊழியர் சம்பள மறுஆய்வு,
அவர் வீட்டு அருகில் கிடைக்கும் சிக்கன் மஸாலா, ஒரு வயது வரை அவர் மகன் பேசாதது இப்படி எண்ணில் அடங்காது அவரின் பிரசங்க தலைப்புகள்.
அறு அடிக்கு கொஞ்சம் குறைச்சல் உயரம், நீண்ட முகம், எலுமிச்சை நிறம், கருப்பும் செம்பட்டையும் கலந்த முடி நிறம்,புனைக்கண், முன் தொந்தி, தளர்ந்த நடை, சிறிது நேரம் முன்பு
தான் மயக்கம் தெளிந்தது போன்ற பார்வை. பொதுவாக இப்படி தான் தோற்றம் தருவார். வயது முப்பதை கடந்தாலும், உடை அனிவது பருவப் பையன் போல தான். கிளிப் பச்சை
நிறத்து போலி போலோ டி க்ஷர்டு அவர் விருப்ப உடை, வாரத்தில் இரண்டு நாள் அந்த அலங்காரத்தில் காட்சி தருவார்.

பொதுவாக நாங்கள் அவருக்கு இறையாகும் நேரம் மதிய சாப்பாடு முடிந்து அலுவலம் அருகே இருக்கும் பொட்டி கடைக்கு புகை ஊத / பாக்கு போட போகும் நெரம். முன்கூட்டியே
அங்கு நின்று கொண்டு இருப்பார். கேள்வி தயாராக இருக்கும். "பங்கு சந்தையின் போக்கை வெளிநாட்டு முதளிட்டாளர்கள் ஆட்டி படைக்கிறார்கள், ரிசர்வ் பேங்க் சேர்மன் ரெட்டி
கண்டு கொள்வது இல்லை !!" என்று ஒரு வாக்கியத்தை வீசுவார், நாம் அதை கேள்வி என்று எண்ணி பதில் சொல்ல எத்தனித்தால் அது மடமை !! நாம் வாயை துறக்கும் முன் அவரே
தொடர்வார். "ரெட்டி சுழ்நிலை கைதி....ப.சிதம்பரம் சொல்வதை செயலாக்கம் செய்வதை அவர் வேலை. வளரும் பண வீக்கத்திலிருந்து நம்மை (?) திசை திருப்பவே பங்கு சந்தை
முதளீட்டை பெருக்குவது போல் நாடகம் ஆடுகிறார்." கேள்வியும் நானே, பதிலும் நானே அது தான் அவர் தம் பாலிஸி.

பெட்டி கடை அத்தியாயம் முடிந்து, சாயம் நாலு மணி போல் ஒரு சில பேர் அலுவலக காப்பி குடிக்க பேண்ட்ரி செல்வர். அங்கே காபி, டீ (அதில் பல வகை எலக்காய், துளசி
இத்யாதி...) வைக்கப் பட்டு இருக்கும். அங்கே அவர் முன் யாராவது காபி குடித்து விட்டால் தொலைந்தார்கள்...ஹர்பல் டியின் மகத்துவத்தை பற்றி பிரசங்கம் தொடங்கிவிடும். "எப்படி பீர் சுவை
போக போக தான் தெரியுமோ அப்படி தான் நாம் ஹர்பல் டீ ருசியை அறிய முடியும். சீனி துண்டு ஒன்று கலக்கலாம் ஆனால் சீனி இன்றி குடித்தால் தான் முழு பயன் அடைய முடியும்.
அறு மாத காலமாக அவர் காப்பி தொடுவது இல்லை. சுடு தண்ணி போன்ற சுவை (?) நம் நாவை கட்டி போட்டு விடும், அப்பறம் நாம் காபியை எறு எடுத்தும் பார்க்க மாட்டோம்." அதற்க்கு சுடு தண்ணியே குடிக்கலாமேனு சொன்னா தொலைந்தோம்... துளசியின் மகிமை பற்றி மீண்டும் ஒரு பிரசங்கம்.

Sunday, April 27, 2008

சிற்றிதழல் பரிச்சயம்.

சிற்றிதழல் பரிச்சயம்.
முன்தைய பதிவில் எனது சிறுகதை பரிச்சயம் பற்றி எழுதினேன், அதோடு continutation ஆக சிற்றிலக்கிய் இதழ்கள் படிக்கலாம் என்ற ஓர் எண்ணம். கூகுள் தேடல் ஒன்றும் பெரிதாக தரவில்லை. சுஜாதா கிருபையால் கணையாழி வலைதளம் பார்தேன், எனக்கு தெரிந்த இலக்கிய பத்திரிக்கை அது ஒன்று தான். அன்று எப்பொழுதும் போல் எனது வாடிக்கையான கடையில் நக்கிரன், ஜுனியர் விகடன், பாக்கியா இத்யாதி, இத்யாதி வாங்க சென்ற பொழுது தான் "உயிர் எழுத்து" பார்தேன். பல்பு எரிந்தது, ஆகா ராஜா ரொம்ப காலமா நாம தேடின சிற்றிலக்கிய பத்திரிக்கை இது தான்.
என்னவோ ஒரு அறிவு ஜீவி look அந்த இதழுக்கு இருந்தது. புளு கலர் அட்டை படத்தில் கிரேக்க அல்லது ரோமானிய சிற்பம், book logo ஒரு யாழி. யாருக்கு இந்த காலத்தில் யாருக்கு யாழி தெரியும் ? தீவர இலக்கியவாதியா இருக்கணும், இல்ல நம்ம மாதிரி இலக்கியவாதியா வர முயற்சி செய்பவரா இருக்கணும். மேலும் அட்டை படத்தில் என்னை மாதிரி பொது ஜனதுக்கு தெரியாத எழுத்தாளர் படம், ஆனால் அவர் கண்ணாடி, அவரின் போஸ் இரண்டுமே அவர் எழுத்தாளர் என்று தணடோரா அடித்தது.
புத்தகம் வாங்கியாச்சு, அடுத்தது என்ன ? படிக்க வேண்டியது தான் !
முதல்ல படிக்க ஆரம்பித்தது கவிதை.... அதற்கு முன்னால், நமக்கு தெரிந்ததெல்லாம், ஒன்றே ஓன்று தான்..
Solitary reaper
8ஆம் கிளாஸ்ல படித்தது, என்னவோ, அது ஒன்று தான் ஞாபகம் உள்ளது. முன்னமே சொன்ன மாதிரி கதையோ, கவிதையோ நமக்கு அதில் ஒரு இறுக்கமோ அல்லது திறுப்பமோ வேண்டும். Soliatry Reaperல ஒரு இறுக்கம் உண்டு.
ஜெயமோகன் வலைதளத்தில் கவிதைகள் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது, நமக்கு தெரியாதது பற்றி பேச கூடாது என்ற நாகரீகம் கருதி சிறுகதை பக்கம் போனால், "கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால், அங்க ஒரு கொடுமை திங்கு திங்கு என்று ஆடியதாம்"
ஆலமர் செல்வம், ஜயகாந்தன் ஸ்டெல்ல் "யாருக்காக அழுதது" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி திருத்தம், செதுக்கி இருந்தார்.
கதை சாரம்சம் இது தான்,
ஒரு நாய் ரொம்ப நாளா ஊளையிட்டு ஒரு பேய ( sorry ஒரு ஆள)
பேஜார் பண்ணிட்டு இருந்தது. அந்த் ஆளோட ஆயா ரொம்ப weakஆக இருந்தாக. நாய் ஊளை தாளாம ஒரு நாள் "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழுனு ஆணையிட்டாஙக" உட்னே நம்ம ஆளு ஒரு தடியோட நாய துரத்த நாய் மெர்ஸ் ஆகி அந்த அளு குரவளைய படுங்கிடுச்சு. அந்த ஆளும் நாய போட்டு தள்ளிட்டாரு. அப்படியெ ஆலமர் அந்த நாய் எதுக்காக ஊளையிட்டதுனு நம்ம guessகு விட்டுடார்.
இது தான் இலக்கிய சிறுகதையா ? வடிவேலு பாணில சொன்னா "நமக்கு தான் உள்ளர்த்தம் புரியலையோ !!!!"

சிறுகதை பரிச்சயம்

எனது சிறுகதை பரிச்சயம் குமுதம்,விகடன்,குங்குமம் ஆகிய பொதுஜன இதழ்களுக்குள் அடக்கம். அதை தாண்டி தமிழில் படித்ததில்லை. 1-3 பக்கத்தில் அடக்கம், இறுதியில் ஒரு இறுக்கம் அல்லது திருப்பம் மிக அவசியம், இல்லை அது கேவலமான படைப்பு. ஒரு sarcastic mentality கொண்டு தான் பல சிறுகதைகளை அனுகிஉள்ளேன். தேனி தங்கபாஸ்கர், ஊமையாள்புரம் சங்கர், உருளைமணி, இப்படி வினோதமான பெயர்களில் ஒரு பக்க கதை எழுதுபவர்கள் தான் எனக்கு தெரியும்.
நான்ஞில் நாடன் பற்றி ஜெயமோகன் வலைதளத்தில் http://jeyamohan.in பார்த்து இருக்கிறேன், விகடனில் அவர் பேட்டி படித்தது உண்டு.
போன வாரம் பழைய சாமான் வித்ததில் ஒரு 500 ருபாய் வருமானம். ஆகா தமிழ் புத்தகம் வாங்கலாம் என்று New century Book Shop சென்ற போது பிராந்து புத்தகம் கண்ணில் பட்டது. விஷ்ணுபுரம் வாங்குவதாக தான் உத்தேசம், ஜெயமோகன் செய்த புண்ணியம், book out of stock, அது மட்டும் கிடைத்திருந்தால் நம்ம blogல அதுக்கு ஒரு விமர்ச்சனம் கண்டிப்பாக.
இன்னும் முழுசாக கூட படிக்கல, விமர்சனம் எழுதும் ஆவல் பொத்துகிட்டு வந்ததால், இந்த உரை.
படித்த ஐந்து கதைகளில், கும்பமுனி நிறைந்து நிற்கிறார். நம்ம எல்லாரும் ஒரு விதத்தில் கும்பமுனி தான். நம்மால முடிந்த அளவு வாழ்கையோட முட்டி மோதி முன்னேற பார்கிறோம். திரவியம் போதுமான அளவு சேர்த்தவன், அதை மேலும் பெருக்குவதிலே குறியாக இருந்து வாழ்கையின் மற்ற aspectஅ தொலைத்து விடுகிறான். சுத்தமாக தோற்பவன் ஒன்று ஞானி ஆகிறான், இல்லை எதாவது சமுதாய தொல்லையை அவனால் முடிந்த அளவு குடுக்கிறான். நம்மள மாதிரி நடுவுல மாட்டி அல்லாடறவன் தான் உண்மையான 21ஆம் நூற்றாண்டு specimen கும்பமுனி.
எதையும் ஒரு கேலியோடு பார்ப்பது தான் கும்பமுனியோட speciality. அவர் வாழ்ந்து முடிந்தாகி விட்டது, காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது, அந்த சமயத்தில் ஒரு அரசாங்க விருது, அதனால் ஒரு தனியார் தொலைகாட்சியில் நேர்கானல், நம்ம வைரமுத்து அய்யா இந்த மாதிரி சந்தர்ப்பத்தை விடவே மாட்டார். நல்ல ஒரு சில்க் ஜிப்பாவாக போட்டுகொண்டு, படிய வாரிய தலையோடு, இமைகளை மேலே செருகி கொண்டு, நேர்காணல் செய்ய வருபவரை வறுக்க தயாராகி விடுவார். பா.விஜய் ஒரு படி மேலே போய் விருதை கலைஞர் கையால் வாங்குவதற்கு தன் செலவிலே ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து, தன்க்கு தானே கலைஞர் கையால் வீர வாள் பரிச்ளித்துக்கொள்வார். கண்டிப்பாக ஒரு கவியரங்கம், கலைஞர் தலைமையில் உண்டு.
கும்பமுனிக்கு காலம் போன காலத்தில் வந்த recognition comedyஅக இருக்கு. வாழ்கைய விலகி நின்று பார்க்க தெரிந்தவருக்கு தான் வாழ்கை பரிகாசமாக தெரியும், மற்றவருக்கு வாழ்கை நம்மை பார்த்து பரிகாசம் செய்வது போல தோண்றும்.
ஒளிபதிவாளருக்கு ஆசாத் ஓட்டல் கொத்து புரோட்டா நினைப்பு, பேட்டியாளருக்கு எப்படியாவது sensation கொண்டு வர வேண்டும் என்று துடிப்பு, சமையல்காரருக்கு சீக்கிரம் சோறு பொங்கி விட வேண்டும் என்ற அவசரம், கும்பமுனிக்கோ எல்லாமே வேடிக்கை. தன்னை சுற்றி நடப்பதை ஒரு நாடகம், தாமும் அதில் ஒரு பாத்திரம் என்ற தெளிவு அவரிடம் உள்ளது.
பேட்டி எடுப்பவர் - இள வயது ஆனால் youngster இல்லை, செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்,மற்றவர் தம் வேலையை பாரட்ட வேண்டும் என்பதற்காகவே வேலை செய்பவர். சின்ன சின்ன வெற்றியில் சந்தோஷம் காண்பவர்.
சமையல்காரர் - வேலையை முடித்தால் போதும் என்ற மன நிலையில் உள்ளவர். பாராட்டும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம், எப்படா வேலையை முடித்து அக்கடானு படுக்கலாம் என்ற மன நிலையில் உள்ளவர்.
கும்பமுனி - அனைத்தையும் கடந்தவர், வாழ்கையை பார்த்து எள்ளி நகைப்பவர்.