Wednesday, June 10, 2009

வார்த்தை நேர்மை - ஆனந்த விகடன் மற்றும் எஸ்ரா

எஸ்.இராமகிருஷ்ணனின் எழுத்தின் பலம் அதன் நேர்மை. வார்த்தை ஜாலங்களுக்கு இடம் கிடையாது. எளிதான வார்தைகளின் ஊடே நம்மை “அடடா..” போட வைத்து விடுவார். அவரது பல கட்டுரைகள் இந்த வகையை சேர்ந்தவை.

ஆனந்த விகடனில் அவரின் தொடர் வரவுள்ளது என்ற அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியது.முதல் கட்டுரை வாசனை பற்றியது. எதோ மிகவும் கஷ்டப்பட்டு எழுத முயன்றது போன்ற ஒரு தோற்றம். வார்த்தை நேர்மை இல்லை. விகடன் குழு எடிட் செய்தது போல் தோன்றுகிறது. விகடன் எப்போழுது ஒரு அறிவு ஜீவித்தனம் கொண்ட பத்திரிக்கை என்ற நினைப்போடு தான் செயல்படும். தரத்தில் குமுதம் போன்றதே. குமுதம் நடுப்பக்கத்தில் தமிழ் நடிகைகளின் படங்களை போடும், விகடன் இன்பாக்ஸ் என்ற பெயரில் இந்தி நடிகையின் படத்தை போடும்.

இது விகடனின் வேலை இல்லாமல் எஸ்ராவின் பங்களிப்பு என்றால், “சார் உங்க கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை.” கட்டுரையின் முடிவில் தகவல் பகுதி திணிப்பு போல் தோன்றுகிறது. இது எல்லாம் லேணா பார்த்துக்கொள்வார். நீங்கள் மீண்டும் உங்கள் இயறக்கையான பாணியில் எழுதுங்கள்.