Saturday, November 15, 2008

வாங்க குளிக்கலாம்….

தொடர்ந்து வரும் பெட்ரோல் விலை ஏற்றம், நமக்கு மட்டும் பிரச்சனை இல்லை, பெட்ரோல் பங்க்குகளுக்கும் தான். தனியார் பங்க்குகள், அரசாங்க பங்க்குகளுடன் விலையில் போட்டி போட முடிவதில்லை. விளைவு… வாடிக்கையாளர்களை கஸ்டமர் ஸர்வீஸ் என்ற பெயரில் குஷிப்படுத்துவது.

இந்தியன் ஆயிலை விட ஷெல் மூன்று ருபாய் விலை ஜாஸ்தி. ஷெல் சென்றால் பெட்ரோல் தவிற மற்ற அனைத்தையும் பற்றி பேசுவார்கள்.

மொத்தமும் பெண் ஊழியர்கள் தான். உள்ள போனவுடன், ஒரு வணக்கம். அப்பறம் வேகமா விலையை கூறிவிட்டு, சேவையை ஆரம்பிப்பாங்க,

“ஸார் விண்டுஷீல்டு கீளின் பண்ணவா ?”

“டயர் பாலிஷ் போடவா ?”

“எதாவது ஸனேக்ஸ் சாப்பிடுங்க… பில் போடற இடத்தில் தான் இருக்கு..?”

இது எல்லாம் முடிந்து கிளம்பும் போது ஒரு டாட்டா வேற…பொண்டாட்டி கூட அலுவலம் போகும் போது இப்படி வழியனுப்பினது இல்லை.

இன்னும் போக போக என்னவெல்லாம் வருமோ ?

 

“சார் குளிப்பாட்டி விடவா ?”

”ஒரு குவிக் ஷேவிங் ?”

“குழந்தைக்கு டயபர் மாத்தனுமா ?”

”கேரளா ஆயில் மஸாஜ் இருக்கு…”

“இன்னிக்கு சனிக்கிழமை, சனி நீறாடனும், எண்ணை தேய்த்து குளிச்சு விடவா ?”

Friday, November 14, 2008

நமிதா ,குஷ்பு – என் காதலை உணர்……

சாலைகளில் செல்லும் போது நாம் எல்லாரும் லாரிகள், டெம்போ மற்றும் ஆட்டோக்களின் பின்னால் எழுதியிருப்பதை பார்த்து இருப்போம். பெங்களுர் போன்ற நகரில் சாலையில் டராபிக்கில் ஊர்ந்து செல்லும் வேளை, அந்த எழுத்துக்கள் தான் நல்ல டைம் பாஸ். பல சமயம் மிகச் சாதாரணமாக இருக்கும், சில சிரிப்பை வரவழைக்கும்.

முக்கால்வாசி லாரி மற்றும் டெம்போகளில் உள்ள வசனம், “Sound  OK Horn”. ரொம்ப நாளா இதை சரியாக நான் படிக்கவில்லை. ஒரு நாள் திடீர் என்று தோன்றியது, “Sound Horn Okaaaaayyyyyy”, இது தான் சரியாக படிக்கும் முறை, அடுத்த தடவை இதை பார்க்கும் போது சொல்லி பாருங்க.

இன்று காலையில் ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த வாசகம்,

Lifte is short

Make a Sweet

      Feel My Love

வாழ்க்கை மிகச் சிறியது, அதை இனிப்பானதாக செய், இப்படித்தான் வர வேண்டும், ஆனால் Make a Sweet, இனிப்பைச் செய் என்று இருக்கு, தவறாக எழுதி இருக்கலாம், Make it sweet என்று வர வேண்டும். 

என் காதலை உணர், கடைசி வரி. ஆண்களை நோக்கி இதை எழுத ஆட்டோகாரர் கேயா ? இல்லை பின்னால் வரும் மகளிர்களை நோக்கியா இந்த வரிகள் ? எத்தனை பொம்பளைகளுக்கு அவர் காதலை சொல்வார் ?

சிறிது தூரம் போன் பின் தான் ரியலைஷைசன் வந்தது.

Make a sweet தான் சரி. அவருக்கு குஷ்பு,நமிதா மாதிரி கொழுக் மொழுக் பெண்கள் தான் பிடிக்கும் போல. அதனால் தான் இனிப்பைக் செய் என்று எழுதி இருக்கார். இனிப்பைச் செய்து விட்டு சும்மா இருப்பாங்களா, தின்னுவாங்க, நம்ம வாழ்கை ரொம்ப சின்னது, அதுக்குள்ள தின்ன முடிந்த எல்லாத்தையும் ஒரு கை பார்த்தா ? உடம்பு ஊத தான் செய்யும். அப்படி தின்னு கொழுக் ஆன பெண்களை பார்த்து தன் காதலை உணரச் சொல்ராப்ல.

அலுவலகம் வந்து விட்டதால் ஆராச்சியை தொடர முடியவில்லை !!!

Wednesday, November 5, 2008

சரோஜா தேவி சோப்பு டப்பா

சென்ற வாரம் நீண்ட நாள் பிறகு நண்பர் ஒருவனை சந்தித்தேன். குசல விசாரிப்புக்கு பிறகு, புதிதாக பிஸினஸ் செய்யப் போவதாக கூறினான். பிஸினஸ் ஆரம்பித்தால் என்னையும் சேர்த்துகோபா கூறியது தான் தாமதம், அடுத்த சனிக்கிழமை வா..உனக்கு டெல் சி இ ஒ அறிமுகப்படுத்தறேன், அப்படியே பிசினஸ் பற்றி உனக்கு தெரிந்துவிடும் என்றான். நம்பர் டு நம்பர் த்ரி பிஸினஸ் இல்லையேனு கேட்டால், டி டி ஸ் கழித்து தான் உனக்கு பேமண்ட் வரும், பார்ம் 16 குடுப்பாஙக என்றான்.

சனிக்கழமை , ஒரு கம்யுனிடி ஹாலில் முப்பது பேர் அமர்ந்து இருந்தார்கள். முக்கால்வாசி இல்லத்து அரசிகள். சிலர் குழந்தைகளோடு அஜர். நம்ம ராசி முதல் வரிசையில் அமர்த்தப்பட்டேன்.

ஒரு உயரமான ஆசாமி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், செல் போனை அனைத்து வைக்கும்படி வேண்டுகோள் (மிரட்டி) விடுத்தார். பின்னர் எந்த அறிவிப்பும் இல்லாமல் என்னைப் பார்த்து, உங்க வாழ்நாள் கனவு என்ன என்றார்….முதல் பென்ச் எனக்கு எப்பொவுமே சரிப்படாது, எனக்கு அப்படி எதுவும் இல்லை என்றேன். சரி நான் கூறுகிறேன் என்று அரம்பித்தார், ஒரு பங்களா, ஐந்து கோடி, கார் ஒரு கோடி, குழந்தைப் படிப்பு, இரண்டு கோடி..இப்படி கணக்கு போட்டு இறுபது கோடியின் நிப்பாட்டினார். ஆனால் மாச சம்பளத்தில் நம்மால் வாழ்நாள் சேமிப்பு முக்கி தக்கி ஒரு கோடி தான்  சேர்க்க முடியும். பக்கதுல இருந்த சிலிவ்லெஸ் ஆண்டி மண்டைய ஓவரா ஆட்டி கேட்டுக்கிட்டாங்க.

கடைசியில் மெட்டர் என்ன, நம்ம முப்பதாயிரம் கட்டி கம்பனியில் சேர வேண்டுமாம். இரண்டே பேர் நாம் மேலும் சேர்த்தால் போதும், அவர்களின் கீழ் உறுப்பினர் சேரச் சேர நமக்கு ”பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்….”

அவர் கம்பனி கம்பனி என்ற பொழுது, பிதாமகன் சுர்யா தான் நினைவுக்கு வந்தார். அயிரம் ருபாய் பொருளை வெறும் முன்னூறு  ருபாய்க்கு கேட்டதால், கம்பனிக்கு கட்டுப்படல…இருந்தாலும் உங்க மன தைரியத்த பாராட்டி, சரோஜா தேவி சோப்பு டப்பா, இனாம்….

கூட்டம் முடிந்து நண்பன் என்ன முடிவு என்றான், “நல்ல திட்டம், அப்போ நான் கிளம்பறேன், வீட்ல தேடுவாங்க” (என்னிக்கு தேடி இருக்காங்க, வேற போய் வரல….)சொல்லி விட்டு எஸ்கேப்.

 

 

 

 

 

 

Tuesday, November 4, 2008

அசோகமித்ரன் – ஊரின் மிக அழகான பெண்

இதற்கு முன்னால் அசோகமித்ரன் படித்ததில்லை. அழிவற்றவை தான் நான் படிக்கும் முதல் புத்தகம். ஆரம்பம் சில கர்ண பரம்பரை கதைகள், பின்னர் அவர் சிறுகதைகள்.
முதல் கதை, திருநீலகண்டர் - திருவோடைத் தேடி என்ற தலைப்பு பொறுத்தமாக இருக்கும். சிறு வயது முதல் திருவோடை தேடி அலைபவனுக்கு இறுதியில் ஆண்டியாக சென்ற ஒரு சொந்தக்காரர், தன் திருவோடை தபாலில் அனுப்புகிறார்.

என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவில்லை. நகுலனை தான் துனைக்கு அழைக்க வேண்டும். சாருவிடம் கேட்டால் திட்டு தான் விழும். ஒரே சமயத்தில் சாருவின் ஊரில் மிக அழகான பெண் - மொழிபெயர்ப்பு கதைகள், மற்றும் அழிவற்றவை படித்ததின் வினை.

சாருவின் மொழிபெயர்ப்புக் கதைகள் அனைத்துமே கிளாசிக். முக்கியமாக சாருவின் முன்னுரை மிகச் துல்லியமாக கதை களம் மற்றும் எழுத்தாளரின் மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.  ஒவ்வொரு கதையும் ஹான்டிங் ( Hauting ) வகை.ஒரு சிறுகதை இவ்வளவு தாக்கம் எற்படுத்துவது எனக்கு இது தான் முதல் முறை.