Wednesday, November 5, 2008

சரோஜா தேவி சோப்பு டப்பா

சென்ற வாரம் நீண்ட நாள் பிறகு நண்பர் ஒருவனை சந்தித்தேன். குசல விசாரிப்புக்கு பிறகு, புதிதாக பிஸினஸ் செய்யப் போவதாக கூறினான். பிஸினஸ் ஆரம்பித்தால் என்னையும் சேர்த்துகோபா கூறியது தான் தாமதம், அடுத்த சனிக்கிழமை வா..உனக்கு டெல் சி இ ஒ அறிமுகப்படுத்தறேன், அப்படியே பிசினஸ் பற்றி உனக்கு தெரிந்துவிடும் என்றான். நம்பர் டு நம்பர் த்ரி பிஸினஸ் இல்லையேனு கேட்டால், டி டி ஸ் கழித்து தான் உனக்கு பேமண்ட் வரும், பார்ம் 16 குடுப்பாஙக என்றான்.

சனிக்கழமை , ஒரு கம்யுனிடி ஹாலில் முப்பது பேர் அமர்ந்து இருந்தார்கள். முக்கால்வாசி இல்லத்து அரசிகள். சிலர் குழந்தைகளோடு அஜர். நம்ம ராசி முதல் வரிசையில் அமர்த்தப்பட்டேன்.

ஒரு உயரமான ஆசாமி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், செல் போனை அனைத்து வைக்கும்படி வேண்டுகோள் (மிரட்டி) விடுத்தார். பின்னர் எந்த அறிவிப்பும் இல்லாமல் என்னைப் பார்த்து, உங்க வாழ்நாள் கனவு என்ன என்றார்….முதல் பென்ச் எனக்கு எப்பொவுமே சரிப்படாது, எனக்கு அப்படி எதுவும் இல்லை என்றேன். சரி நான் கூறுகிறேன் என்று அரம்பித்தார், ஒரு பங்களா, ஐந்து கோடி, கார் ஒரு கோடி, குழந்தைப் படிப்பு, இரண்டு கோடி..இப்படி கணக்கு போட்டு இறுபது கோடியின் நிப்பாட்டினார். ஆனால் மாச சம்பளத்தில் நம்மால் வாழ்நாள் சேமிப்பு முக்கி தக்கி ஒரு கோடி தான்  சேர்க்க முடியும். பக்கதுல இருந்த சிலிவ்லெஸ் ஆண்டி மண்டைய ஓவரா ஆட்டி கேட்டுக்கிட்டாங்க.

கடைசியில் மெட்டர் என்ன, நம்ம முப்பதாயிரம் கட்டி கம்பனியில் சேர வேண்டுமாம். இரண்டே பேர் நாம் மேலும் சேர்த்தால் போதும், அவர்களின் கீழ் உறுப்பினர் சேரச் சேர நமக்கு ”பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்….”

அவர் கம்பனி கம்பனி என்ற பொழுது, பிதாமகன் சுர்யா தான் நினைவுக்கு வந்தார். அயிரம் ருபாய் பொருளை வெறும் முன்னூறு  ருபாய்க்கு கேட்டதால், கம்பனிக்கு கட்டுப்படல…இருந்தாலும் உங்க மன தைரியத்த பாராட்டி, சரோஜா தேவி சோப்பு டப்பா, இனாம்….

கூட்டம் முடிந்து நண்பன் என்ன முடிவு என்றான், “நல்ல திட்டம், அப்போ நான் கிளம்பறேன், வீட்ல தேடுவாங்க” (என்னிக்கு தேடி இருக்காங்க, வேற போய் வரல….)சொல்லி விட்டு எஸ்கேப்.

 

 

 

 

 

 

2 comments:

கோவி.கண்ணன் said...

:)

மல்டிலெவல் மார்கெட்டிங்க்...

இனிக்க இனிக்க பேசுவாங்க... எரிச்சலாக வரும், நானும் அதில் கொஞ்சம் பணத்தை இழந்திருக்கிறேன். பேராசையால் இல்லை. நண்பர்கள் என்பதால் தட்டமுடியாமல் வாங்கி தொலைத்து மறந்தது. இப்போதெல்லாம் நேரடியாக 'நோ' சொல்லிவிடுகிறேன்

Ash said...

ipo multi level marketing panra friends en theru pakkam vantha nan apdiye beach road vazhiya escape....een if i say i dnt have money to spare,udane "ena machan, unaku nan kaasu tharenda, apram thiripikudutha pothum" -nu vera solluvanga..